தக்காளியை உணவில் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்களுக்கு 35ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் பத்தாயிரம் பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.
பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.
நன்றி
தினகரன்

Post a Comment