0

ஊறுகாய் விளம்பரங்களில் காரம், மணம் நிறைந்தது என்று காரத்திற்கே முதலிடம் தருகிறார்கள். மிளகாய் சேர்க்காத சமையலை நம்மால் ருசிக்க முடியாது.. இதில் மிகவும் அதிகமான சிவப்பு மிளகாயை உபயோகிப்பவர்கள் ஆந்திராகாரர்கள் தான். காஷ்மீர் சிவப்பு மிளகாய் நிறமுள்ளது. ஆனால் காரம் இருக்காது. மிளகாய்களில் பல வகையுண்டு சமையலுக்கு ஊறுகாய்களுக்கு மசாலாக்களுக்கு என்று விற்கப்படுகிறது. ஆந்திரா மிளகாயை விட தேஜ்பூரில் விளையும் நாகாஹாரி ரகத்திற்கு தான் உலகிலேயே அதிக காரமுள்ள மிளகாய்கள் என்று க்வாலியரிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிக காரமுள்ள உணவு உடல், வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மேலை நாடுகளில் மிளகாய் காரத்திற்க பதிலாக மிளகை உபயோகிப்பார்கள். மிளகு காரம் அதிகம் பாதிப்பல்லை. ஊறுகாய்களுக்கு அதிக காரம் தேவைப்படும். அவை கெடாமல் பதமாக இருப்பதற்கு தான் உணவில் மட்டும் மிதமான காரத்தை உபயோகிக்கலாம்.

உணவில் மிளகாய் காரத்தை குறைத்தால் பருமனான உடல் மெலியுமாம். காரமான உணவு உடல் சூட்டை அதிகரித்து உடல் பருமனும் அடைகிறது.. பசியும் கூடுவதால் உணவின் அளவும் அதிகரிக்கிறது. மிளகாய்  குறைவாக உபயோகிப்பவர்களின் உணவும் மிதமாக இருக்கும். உணவில் இனிப்பு, காரம், புளிப்பு எல்லாமே மிதமாக இருக்க வேண்டும். நமது தென்னாட்டு சமையலில் எல்லாச் சுவைகளையும் மிதமாக உபயோகித்து வருவதால் உலகம் முழுவதும் நமது சமையலுக்கு தனி இடம் உண்டு.

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top