0

நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை எதிர்ப்பு சக்தி கொண்டதாக விளங்குகிறது. ஈரலுக்கு பலம் அளிக்கக் கூடியதாக விளங்குகிறது. புண்களை ஆற்றும் சக்தியும், வீக்கத்தை கரைக்கக் கூடியதாகவும் தகரை பலன் அளிக்கிறது. இவற்றின் காய்கள் கொத்து கொத்தாக காணப்படும். மஞ்சள் நிறத்தில் லேசான கருப்பு புள்ளிகளுடன் பூக்கள் கொண்டதாக இந்த செடி சர்வசாதாரணமாக சாலை ஓரங்களிலும், அனைத்து இடங்களிலும் வளர்ந்து இருப்பதை பார்க்க முடியும்.



இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு மீன்களின் எலும்புகளை போன்று  காணப்படுவதால் இது மீன் எலும்பு தகரை என்ற பெயரை பெற்றுள்ளது. மேலும்  தண்டுகளின் பக்க வாட்டில் முட்களையும் பெற்றுள்ளதாக தகரை செடி  காணப்படுகிறது. நாம் அன்றாடம் காணும் தகரை செடியை கொண்டு உடலுக்கு பயன் அளிக்கக் கூடிய பல்வேறு மருந்துகளை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் மீன் எலும்பு தகரை செடியின் இலைகள் மற்றும் காய்கள். தேன். எலுமிச்சை சாறு. மீன் எலும்பு தகரை என்று சொல்லக் கூடிய இந்த செடியின் காய்கள் மற்றும் இலைகளை சிறிய அளவில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து ஒரு தேநீராக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

இதை தேநீருக்கு பதிலாக தினமும் பருகி வருவதன் மூலம் எலும்புகள் பலம் பெறுகின்றன. தினமும் 100 மிலி வரை இதை எடுத்துக் கொள்ளலாம் ஈரலில் தேவையில்லாத கொழுப்புகள் படிவதை இது தடுக்கிறது. உடல் பருமனை குறைத்து உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள மீன் எலும்பு தகரை உதவுகிறது. உடலின் உள்உறுப்புகளில் தங்கியிருக்கும் மாசுகளை அகற்றும் தன்மை உடையதாக தகரை பயன் அளிக்கிறது. தேவையில்லாத கொழுப்பை எரித்து வெளியே தள்ளும் சக்தி இந்த செடிக்கு உள்ளது.

Post a Comment

 
Top