0

நோய் கிருமி எதிர்ப்பு தன்மை கொண்ட இதை உள் மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது புற்று நோயை குணப்படுத்தும் பலன் தரக் கூடியதாக அமைகிறது.

மஞ்சனத்தி என்ற நுனா மரத்தின் இலைகள், காய்கள், பழங்கள், பட்டைகள் என அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படக் கூடியது. நுனா மரத்தின் பட்டையை பயன்படுத்தி மருந்து ஒன்றை தயார் செய்யலாம். குளிர் காய்ச்சல், நெறிகட்டு போன்ற பிரச்னைகளுக்கு இதன் கஷாயம் சிறந்த மருந்தாக அமைகிறது. இதற்கு தேவையான பொருட்கள் நுனா மரத்தின் பட்டை, சீரகம், பனங்கற்கண்டு. நுனா பட்டையை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.



இதனுடன் அரை ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு பனங்கற்கண்டு. இதனுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயம் தயார் செய்து கொள்ள வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கும் போது காலை, மாலை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். 50 மிலி வரை இதை எடுத்துக் கொள்ளலாம். இதை பருகுவதால் வயிற்று கோளாறுகள் குறைகின்றன. முறை வைத்து வருகிற காய்ச்சலை தடுக்கிறது.

கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படக் கூடிய வீக்கத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் நுனா பயன் தருகிறது. நுனாவின் காய்களை பயன்படுத்தி முறையற்ற மாதவிடாய் பிரச்னைகளுக்கான மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் நுனா இலை மற்றும் காய்கள். மிளகு பொடி. சீரகம். இலை மற்றும் காய்களை பசையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நெல்லிக்காய் அளவு இலை பசை மற்றும் சம அளவு நுனா காய் பசை எடுத்து சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிய அளவு மிளகு பொடி சேர்க்க வேண்டும். கால் ஸ்பூன் அளவு சீரகம் சேர்க்க வேண்டும்.

ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 50 முதல் 100 மிலி வரை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் வரும். அதே போல் முறையற்ற மாதவிடாய் பிரச்னை உள்ள பெண்கள் 48 நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மாதவிடாய் ஒரு ஒழுங்குக்கு வருகிறது. இவ்வாறு நுனா மரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது.

Post a Comment

 
Top