உடல் பருமனை குறைத்து தாது வெப்பத்தை அகற்றி உடலுக்கு வலுவை உண்டாக்கும். பெண்களுக்கான மாதவிடாய் தொல்லை, காய்ச்சல், வாயுத்தொல்லை ஆகியவற்றை குணமாக்கும்.
பித்ததாகம், பயித்தியநோய், கபரோகம், குதிக்காலை பற்றிய வாயு, வாந்தி கழிச்சல், நீர்வேட்கை முதலியவற்றை முற்றிலும் குணமாக்கும். அபினி கஞ்சா போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி அதன் விளைவாக ஏற்படும் பல்வேறு மனநோய்கள் உடல் நோய்கள் நீங்குவதற்கு கோரைகிழங்கு, இலைக்கன்னிவேர், வசம்பு, சுக்கு, ஆகியவற்றை வகைக்கு 3கிராம் எடுத்து குடிநீராக்கி குடித்தால் குணமாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகளை குணப்படுத்தும், மார்புவளர்ச்சி மற்றும் தாய்பால் சுரப்பை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு கோரை கிழங்கு சிறந்த மருந்தாகும்.
கிழங்கின் சூரணத்தை 1கிராம் அளவில் காலை மாலை தேனில் கலந்து சாப்பிட புத்திக்கூர்மை உண்டாகும். தாதுவிருத்தி உடல்பொழிவும் ஏற்படும். கழிச்சலுடன் ஏற்படும் சுரம் நீங்குவதற்கு கோரைக்கிழங்கு மாம்பட்டை இரண்டையும் இடித்து பொடியாக்கி பிட்டு செய்து அதை பிழிந்து எடுத்த சாற்றில் அதிவிடயம், இலவம்பிசின் ஒரோ அளவாக சேர்த்து ஒரு தேக்கரண்டிவீதம் சாப்பிட்டால் மூன்று வேளையில் தீரும். கிழங்கை குடிநீ்ர் செய்து காய்ச்சிய பாலில் கலந்து மோராக்கி அதில் சோற்றுடன் கலந்து சாப்பிட சிறுவர்களுக்கு ஏற்படும் பசியின்மை தீரும்.
Post a Comment