0

நரம்பு மண்டலங்களை  தூண்டக் கூடிய வசம்பானது வலியை போக்கவல்லது. பதட்டத்தை தணிக்க கூடியது. நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் வசம்பு,  இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும். ரத்தத்தை சுத்தப்படும்.



பிள்ளை வளர்த்தி என கூறப்படும் வசம்பு, செரியாமை, பசியின்மை போக்க கூடியது. வயிற்று மாந்தத்தை சரிசெய்யும் மருந்தாகிறது. பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன், அரை முதல் ஒரு கிராம் வசம்பு பொடி, சம அளவு  சுக்கு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டிய பின் காய்ச்சிய பால் சேர்க்கவும்.  இதை குடிப்பதன் மூலம், வயிற்று போக்கு நிற்கும். வாயு பிரச்னை சரியாகும்.

வசம்புவை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதிகமாக சாப்பிடும்போது வாந்தியை உண்டாக்க கூடியது. எனவே, 350 மில்லி  கிராமுக்கு மிகாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்புவிற்கு மாங்கல்யா என்ற வடமொழி பெயர் உண்டு. விட்டுவிட்டு வரும்  வலியை வசம்பு குறைக்கும். அழுகிற குழந்தைகளுக்கு வசம்பு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்தாகிறது.  பக்கவாதத்தை போக்கும் தன்மை கொண்டது.

பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரை கொண்டது வசம்பு. குழந்தைகளை குளிப்பாட்டும் போது வசம்பை கரியாக்கி தாய் பாலில்  கலந்து நாவில் தடவுவார்கள். இதனால், குழந்தைகளுக்கு ஜீரண கோளாறு இருக்காது. நரம்பு மண்டலம் பலப்படும். குழந்தைக்கு  வயிற்று வலி இருக்கும்போது வசம்பை கரியாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து தொப்புளை சுற்றி பத்தாக போடும்போது  குழந்தைகள் அழுவதை நிறுத்தும்.

உரைப்பான் என கிராமத்தில் அழைக்க கூடிய வசம்பை கொண்டு நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் டானிக் தயாரிக்கலாம். ஒரு  டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் வசம்பு துண்டை, 3 அல்லது 4 மணி நேரம் ஊரவைக்க  வேண்டும். பின்னர், வசம்பை எடுத்துவிட்டு, வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.இதை குடிப்பதால் மன உளைச்சல்  மறைந்து போகிறது. மூளைக்கு இதமான சுகத்தை கொடுக்கிறது. ஞாப சக்தியை அதிகப்படுத்தும். வயிற்று கோளாறு, பேதி,  வயிற்றுபோக்கு சரியாகும்.

வசம்பை பயன்படுத்தி இருமல், சளி, அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வசம்பு பொடி, அரை ஸ்பூன் அதிமதுர  பொடி, ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தேனீராக பருகலாம். இது வாயு பிரச்னையை  சரிசெய்யும். குடலில் உள்ள புண்களை ஆற்றும். இருமலை தணிக்கிறது. சளியை கரைக்க கூடியது. வயிற்று கோளாறு ஏற்படாது.  நோய் தடுப்பு மருந்தாக அமைகிறது.

Post a Comment

 
Top