0
சருமத்தை நன்றாக பாதுகாக்க தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். சோடா மற்றும் குறைந்த கலோரி பானங்களை தவிர்க்கவும்.

அதிகமான சூரிய ஓளியை தவிர்ப்பது நல்லது. புற ஊதாக் கதிர்களால் தோல் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

சூரிய ஒ‌ளி‌யி‌ல் செ‌ல்ல வே‌ண்டி இரு‌ந்தா‌ல் தரமான சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் இரு‌ந்து பாதுகா‌க்கு‌ம் பசைகளை தடவிக்கொண்டு செல்லவும்.

சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் இரு‌ந்து பாதுகா‌க்கு‌ம் நீங்கள் உதடுகளிலும் தடவிக்கொள்ள மறந்து விடாதீர்கள்.


உடல் சருமத்திற்கு கிரீம்களை பயன்படுத்தும்போது அதிகம் கவனம் தேவை. சில தரமற்ற கிரீம்களால் நன்மையை விட தீமையே அதிகம்.

சருமத்தை எப்போதும் சுத்தமாக வை‌த்‌திரு‌க்கவு‌ம். உடலை‌த் துடை‌ப்பத‌ற்கு ‌மிருதுவான து‌ணிகளையே‌ப் பய‌ன்படு‌த்தவு‌ம்.

குடு‌ம்ப‌த்‌தி‌ல் எ‌ல்லோரு‌ம் ஒரே வகை சோ‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். அவரவ‌ர் சரும‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற சோ‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்தவு‌ம்.

ம‌ஞ்ச‌ள் பூ‌சி‌க் கு‌ளி‌ப்பது எ‌ன்னவோ ‌ப‌ட்டி‌க்கா‌ட்டு‌த் தன‌ம் எ‌ன்றெ‌ல்லா‌ம் ‌‌நினை‌க்காம‌ல் குறை‌ந்த ப‌ட்ச‌ம் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் நா‌ளிலாவது ம‌ஞ்ச‌ள் தே‌ய்‌த்து கு‌ளி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

ம‌ஞ்ச‌ள் ந‌ல்ல ‌கிரு‌மி நா‌சி‌னி எ‌ன்பது ப‌ட்டி‌க்கா‌ட்டு‌க்கு‌க் கூட தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது எ‌ன்பதை உண‌ர்‌வீ‌ர்க‌ள்.

ம‌ஞ்ச‌ள் தே‌ய்‌த்து கு‌ளி‌க்க முடியாதவ‌ர்க‌ள் கு‌ளி‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌‌ரி‌‌ல் ‌கொ‌ஞ்ச‌ம் ம‌ஞ்ச‌ள் பொடியை‌‌க் கல‌ந்து‌ம் கு‌ளி‌க்கலா‌ம்.

மழை‌க் கால‌ங்க‌ளி‌ல் வெ‌ளியே செ‌ன்று‌வி‌ட்டு ‌திரு‌ம்‌பியது‌ம் கால‌், கைகளை ந‌ல்ல த‌ண்‌ணீ‌‌ரி‌ல் கழு‌வி‌‌வி‌ட்டு அடு‌த்த வேலையை‌ப் பாரு‌ங்க‌ள்.

மாத‌த்‌தி‌ல் ஒரு நாளாவது எ‌ண்ணெ‌ய் தே‌‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் சரும‌த்‌தி‌ன் செ‌ல்க‌ள் எ‌ல்லா‌ம் பு‌த்துண‌‌ர்வு பெறு‌ம்.

உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த நல‌க் கு‌றி‌ப்புகளை தெ‌ரி‌வியு‌ங்‌க‌ள். உ‌ங்களது பெயருட‌ன் த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா‌வி‌ல் ‌வெ‌ளி‌யிட‌ப்படு‌ம்.

Post a Comment

 
Top