0
கபம் நீங்கு உடல் தேற:
கரிசலாங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட கபம் நீங்கி உடல் தேறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக்கூடாது.

அடிக்கடி வரும் மயக்கத்தை நிறுத்த :
5.6, சீத்தா பழக் கொட்டைகளை பொடியாக்கி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.


.இடுப்பு வலி குணமாக :
முருங்கைக் கீரையுடன் இடித்த சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பையும் கலந்து இடுப்பின் மீது தடவி சூடுபறக்க தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.

சொறி, சிறங்கு படை நீங்க:
உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் வைத்து அரைத்து சொறி, சிறங்கு படை மீது போட குணமாகும்.

பித்தத்தை நீக்க:
பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினசரி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.

விக்கல் குணமாக:
நெல்லிக்காய் இடித்து சாறுபிழிந்து. நெய் கலந்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.

தேள்கடி விஷம் குறைய :
தேள் கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நிற்கும்.

கம்பளிப் பூச்சிகடி குணமாக :
கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.

இரத்த புற்று நோய் குணமாக:
கேரட் ஜூஸ், (அல்லது) துளசிச் சாறு (அல்லது) திராட்சைச் சாறு ஆகியவைகளைக் கொடுத்து இரத்தப் புற்றுநோயினை குணமாக்கலாம்.

நீரிழிவு நோய்க்கு :
நாவல்பழத்தின் 10 கொட்டைகள் எடுத்து, இடித்து 150 மில்லி நீர்விட்டு கண்டக் காய்ச்சி அந்நீரை காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும்.

ஞாபக சக்தி பெருக:
பப்பாளி பழத்தை தினசரி சிறு அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.

காசினிக்கீரை:
இதைச் சமைத்து சாப்பிட்டால் நல்ல மெருகுடன் உடல் இருக்கும். இரத்தம் சுத்தியாகி விருத்தியாகும். உடல் வீக்கம் குறையும்.

அலர்ஜிக்கு மருத்துவம்:
அரை எலுமிச்சம்பழம் சாரும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரும் கலந்து அருந்திவந்தால் அலர்ஜி குணமடையும்.

Post a Comment

 
Top