0


நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள குடும்பத்தினர், தங்கள் உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

ஒரு குடும்பத்தினர் நீரிழிவுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் அதே பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் இன்னொரு குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. மீறி திருமணம் செய்தால், அந்த தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும்.


நடுத்தர வயதிற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. அதையும் மீறி உடல் எடை வேகமாக அதிகரித்து வந்தால் உடனே மரு‌த்துவரை அணுகுவது நல்லது.

40 வயதை எ‌ட்டிய ‌பிறகு வருட‌த்‌தி‌ற்கு ஒரு முறை தா‌ங்களாகவே மு‌ன் வ‌ந்து சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஆரம்பத்திலேயே இந்த நோய் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், பின்னால் வரக்கூடிய பெரிய பாதிப்பில் இருந்து எளிதில் தப்பிவிடலாம்.

Post a Comment

 
Top