தினசரி அரை மணி நேரமாவது வியர்வை வரும் வகையில் நடப்பது, குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அதிக உப்பை அறவே தவிர்ப்பது போன்றவற்றை செய்து வந்தால் சிறுநீரகம் நல்ல முறையில் செயல்பட உதவும்.
வயதானவர்கள்ல் கூடுதல் புரதத்தை தவிர்த்தல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயை முறையான சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை செய்தால் சிறுநீரகத்திற்கு நல்லது.
லேசான கால் வீக்கம், முக வீக்கத்துக்கு சில நேரங்களில் சிறுநீரக நோய்கள் காரணமாக இருக்கலாம்.
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றை அலட்சியப் படுத்தக் கூடாது. சிறுநீர் வரும் பாதையில் அடைப்பைப் ஏற்படுத்தவும், நோய் தொற்று மேல் பக்கம் சென்று சிறுநீரகங்களைப் பாதிக்கவும் செய்யலாம்.
சிறுநீரகத்தில் கல் உண்டாகி அதனை உடைத்து வெளியேற்றும் சிகிச்சையை செய்தாலும் கூட, மீண்டும் கல் உருவாக வாய்ப்புள்ளது.

Post a Comment