கண்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதாவது கண் உறைகளுள் உள் உறை கார்னியாவின் எதிர்ப்புறத்தில் ரெட்டினா என்னும் விழித்திரையில் உள்ளது.
கண் உறைகளில் நடு உறை கோராய்டு உறை எனப்படுகிறது. இது நுண்ணிய ரத்தத் தந்துகிகளைப் பெற்றுள்ளது.
கார்னியாவிற்கும் லென்சிற்கும் இடையில் ஓர் தெளிந்த அக்வஸ் ஹியூமர் என்னும் திரவம் நிரம்பி உள்ளது.
துல்லியமான பார்வைக்கு காரணமாக இருப்பது விழித்திரையின் மையத்தில் இருக்கும் மாக்குல்லா என்ற பகுதியாகும்.
ஒருவருடைய கார்னியாவும், லென்சும் தெளிவாக பிம்பத்தை விழச்செய்ய முடியாத பொழுது அவரால் சரியாகப் பார்க்க இயலாது. இதைச் சரி செய்யத்தான் அந்த கண்களுக்கேற்ற லென்ஸ் கொண்ட கண்ணாடி தேவைப்படுகிறது.
தற்போது வந்திருக்கும் லேசர் கதிர் சிகிச்சையில், கார்னியாவின் வளைவை லேசர் கதிர்கள் சரி செய்து பிம்பத்தை சரியாக விழச் செய்கிறது. இந்த சிகிச்சைக்கு சில நிமிடங்களே போதும்.

Post a Comment