கொழுப்புச் சத்தும் என்றதும் அது ஏதோ உடலுக்கு ஆகாத ஒன்று என்று எண்ண வேண்டாம். எதுவுமே அளவுக்கு அதிகமாகும் போதுதான் தீமையளிக்கிறது.
கொழுப்பு மற்றும் எண்ணெய்களில் அதிக அளவு சக்தி உள்ளது. இந்த சக்திதான் நாம் ஒரு செயலை செய்ய உதவி செய்கிறது.
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், கொழுப்பில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மூலம் உட்கிரகித்தல் திறனை அதிகப்படுத்துகிறது.
உடலுக்குத் தேவையான செயலாக்க பொருட்கள் உருவாக்கத்திற்கு கொழுப்பு பயன்படுகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு சத்துத் தேவைப்படுகிறது.
அதிக அளவு கலோரிகள் உள்ள கொழுப்பு உணவுகள் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது.
அதிக கொழுப்புச் சத்துள்ள உணவை உண்ணும் பொழுது உடல் பருமனாவதோடு, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.

Post a Comment