எனர்ஜி பார் என்கிற சாக்லெட்டை ஒருவேளை உணவுக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?
ஊட்டச்சத்து ஆலோசகர் வினிதா கிருஷ்ணன் இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். வெளியூர் போகிறீர்கள்... உணவுக்கு வழியில்லை அல்லது சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கவில்லை என்கிற நிலையில், அவசரத்துக்கு எப்போதாவது ஒருமுறை எனர்ஜி பார் எடுத்துக் கொள்ளலாம்.
அப்போதும் அதன் பாக்கெட்டில் உள்ள சத்துக்களின் விவரங்களைப் பார்த்துவிட்டே உண்ண வேண்டும். நமக்குத் தேவையான கலோரி, புரதம் மற்றும் பிற சத்துகள் இருந்தால் ஓ.கே. மற்றபடி added sugar, added cholestral மற்றும் saturated fat இருப்பதாகத் தெரிந்தால் தவிர்ப்பதே சிறந்தது.
மற்றபடி இதையே ஒரு உணவுப்பழக்கமாக மாற்றிக் கொள்வது தவறு. இந்த மாதிரி எனர்ஜி பார்களை சாப்பிட்டால், முழுமையாக சாப்பிட்ட மனநிறைவு கிடைக்காது. இவற்றில் நார்ச்சத்து சேர்த்தால் கெட்டுவிடும் என அதைச் சேர்க்க மாட்டார்கள். எனவே, நமக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்காமல் போகும். சரிவிகித புரதமும் கிடைக்காது. அதனால், எப்போதாவது உணவு கிடைக்காத சூழலில் எடுத்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
நன்றி
தினகரன்

Post a Comment