0

தேவையானவை:

ராஜ்மா சுண்டல் - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
உலர் சிவப்பு மிளகாய் - 2
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தேங்காய் - 2 முதல் 3 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 12-15
உப்பு -  தேவையான அளவு


செய்முறை:

போதுமான தண்ணீரில் ராஜ்மா சுண்டலை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். 1 தேக்கரண்டி உப்பு மற்றும் 4-5 கப் தண்ணீர் விட்டு ஊற வைத்த ராஜ்மா சுண்டலை சமைக்கவும். வெந்த பின் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்த உடன், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். 10-15 வினாடிகள் வறுக்கவும். இப்போது சமைத்த ராஜ்மா சுண்டல், உப்பு சேர்த்து 4-5 நிமிடங்கள் சமைக்கவும். அடுப்பை அணைத்து தேங்காய் சேர்த்து கலக்கவும். ராஜ்மா சுண்டல் தயார்.

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top