0

வயிற்று கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதும், மலச்சிக்கலை சரிசெய்ய வல்லதும், சிறுநீரை பெருக்க கூடியதும், வீக்கத்தை குறைக்கும் தன்மையை பெற்றதுமான இஸ்போகல் வித்து.

இஸ்போகல் வித்து, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் விதைகள் மிக சிறியதாக உமி போன்று காணப்படும். இஸ்போகல் வித்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. உடலில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும் மருந்தாக பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

சீத பேதி, ரத்த பேதியை போக்கும். வயிற்று புண்களை குணமாக்குகிறது.இஸ்போகல் விதைகளை நீர்விட்டு ஊற வைத்தால் ஜெல் போன்று இருக்கும். இந்த ஜெல்லை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். இது அதிக கொளகொளப்பு தன்மையுடன் இருக்கும். இதை சாப்பிட்டால் கை, கால்,  உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கும்.

மலச்சிக்கலை சரிசெய்கிறது.இஸ்போகல் விதையானது உள் உறுப்புகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. மென் திசுக்களுக்கு பலம் தருவதுடன், புண்களை ஆற்றுகிறது. சிறுநீரக தாரையில் ஏற்படும் வீக்கத்தை கரைக்கும். வீக்கத்துக்கு மேல் பூச்சு மருந்தாகிறது. இஸ்போகல் விதையை பயன்படுத்தி கழிச்சல், சீத கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். நீர்விட்டு  ஊற வைத்த இஸ்போகல் விதையை எடுத்து கொள்ளவும்.

இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கஞ்சி போன்று தயாரிக்க வேண்டும். இதை வடிக்கட்டி ஆற வைத்து மோர் சேர்த்து சாப்பிடுவதால், ரத்த மற்றும் சீத கழிச்சல் சரியாகும். பாக்டீரியாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சரியாகும். இஸ்போகல் விதையானது, வீக்கம் வலியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வயிற்று கோளாறுகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. வலி நிவாரணியாக விளங்குகிறது. 

இஸ்போகல் விதையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பலம் தரக்கூடியதும், உணவு பாதையை பலப்படுத்த கூடிய பாயசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஊறவைத்த விதைகள், நெய், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால்.நெய் உருகியதும்  அதனுடன் ஊறவைத்த விதைகள், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு வேக வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து பாயசம் போன்று தயாரிக்கவும். ஒரு நாளைக்கு 50 முதல் 100 வரை எடுத்துக்கொள்ளலாம்.

இது மலச்சிக்கலை போக்கும். உடலுக்கு பலம் தரும் உணவாகிறது.அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்னை, வயிற்று எரிச்சலை இஸ்போகல் விதை சரிசெய்கிறது. குளிர்ச்சி தரக்கூடிய இது சவ்வு தன்மையை பெற்றது. ஈரல், பித்தப்பை, குடலுக்கு பலம் தருகிறது. வயிற்று கடுப்பு, வலியை போக்கும். பித்தசமனியாக உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை 5 முதல் 10 கிராம் வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் பலம் பெரும்.

Post a Comment

 
Top