0

இது வயிற்று வலியை போக்கவல்லது, ரத்தக்கட்டை கரைக்க கூடியது, வயிற்று கோளாறுக்கு இது மருந்தாகவும், வலி நிவாரணி மருந்தாகவும் விளங்குகிறது.

கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரக் கூடியது அடம்பு. பல்வேறு நன்மைகளை கொண்ட இது படர்ந்து கொடியாக இருக்கும். இதற்கு ஆட்டுக்கால் அடம்பு என்ற பெயரும் உண்டு. அடம்புவின் இலைகள் ஆட்டுக்கால் போன்ற தோற்றம் கொண்டது. இலைகள் கடினமாகவும், பூக்கள் நீல நிறமாகவும் இருக்கும். அரியவகை மருத்துவ மூலிகையான அடம்பு வயிற்றுபோக்கை நிறுத்தக் கூடியது. மலச்சிக்கலை போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.



அடம்புவை பயன்படுத்தி சிறுநீரை பெருக்க கூடிய மருந்து தயாரிக்கலாம். அடம்புவின் வேரை சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர், ஒரு டம்ளர் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், இது சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு வயிறு மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

அடம்பு இலைகளை பயன்படுத்தி வயிற்று வலிக்கான மருந்து தயாரிக்கலாம். 5 முதல் 10 இலைகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை குடித்தால் வயிற்று வலி சரியாகும். அல்சருக்கு மருந்தாகிறது. மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந் தால் அதை கரைக்கும். 

சர்க்கரை நோயை தணிக்க கூடிய தன்மையை பெற்றுள்ள மூலிகை அடம்பு. இது ரத்தக் கசிவை தடுக்கும். குமட்டல், வாந்தியை தணிக்க கூடியது. வயிற்றுக் கோளாறு அனைத்துக்கும் இது அற்புதமான மருந்தாகிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கை சரிசெய்கிறது. அடம்பு இலைகளை பயன்படுத்தி மூட்டு வலி, வீக்கம் மற்றும் வயிற்று வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

அடம்பு இலைகளை எடுத்து விளக்கெண்ணெய் மீது வைத்து சிறுதீயில் சூடுபடுத்தவும். வலி இருக்கும் இடத்தில் சூடுபடுத்தப்பட்ட இலைகளை வைத்து கட்டும்போது வலி மற்றும் வீக்கம் குறையும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால், இந்த இலையை கட்டி வைத்தால் வலி சரியாகும். அடம்பு, வலி நிவாரணியாக செயல்படுகிறது. , மூலம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஆட்டின் கால் தடத்தை போன்று இருக்கும் அடம்புவின் இலைகளை உடைத்தால் அதிலிருந்து பால் வரும். அரியவகை மூலிகையான இதை அழகிற்காக வீட்டில் வளர்க்கலாம்.

Post a Comment

 
Top