மஞ்சள் காமாலைக்கு மருந்தாக அமைவதும், தொற்றுநோய்களை போக்கவல்லதும், பித்தத்தால் ஏற்படும் நோய்களை தடுக்க கூடியதும், அல்சரை குணப்படுத்தவல்லதும், உடல் வலியை போக்க கூடியதும், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்ய கூடியதுமானது பறவைக்கால் புல்.
பறவைக்கால் புல்லானது ஆடு போன்ற கால்நடைகளுக்கு உணவாக பயன்படுவது மட்டுமின்றி மருந்தாகவும் விளங்குகிறது. வலி நிவாரணியான இது வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. பித்தத்தால் ஏற்படும் நோய்களை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. வீக்கத்தை கரைக்க கூடியது. வலியை போக்கவல்லது. தோல்நோய்களை சரிசெய்ய கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பறவைக்கால் புல்லின் கதிர்கள் காகத்தின் கால் தடம்போல் இருக்கும். இதன் கதிர்களில் விதைகள் இருக்கும்.
பறவைக்கால் புல்லை பயன்படுத்தி பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருவேளைக்கு 5 முதல் 10 கதிர்கள் எடுத்து கொள்ளவும். இதை அதிகளவில் பயன்படுத்த கூடாது. கதிர்களுடன் மிளகுப்பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கலாம். இது டைபாய்டு உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலை குணமாக்க கூடியது. தொற்றுநோய்களை போக்க கூடியது.
பறவைக்கால் புல்லானது வியர்வையை தூண்டி காய்ச்சலை சரிசெய்யும் தன்மை கொண்டது. உடல் வலியை போக்கும். ஊட்டச்சத்தான உள்மருந்தாக விளங்குகிறது. பறவைக்கால் புல்லை பயன்படுத்தி மஞ்சள்காமாலை, அல்சர், சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்று ஆகியவற்றை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். பறவைக்கால் புல்லின் வேர், தண்டு, கதிர், இலை ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி ஆற வைத்தபின் மோர் சேர்த்து குடிக்கலாம். இது பித்தத்தை சமமாக்கும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். ஈரல் வீக்கத்தை தணிக்கும். சிறுநீரக பாதை தொற்று சரியாகும்.பறவைக்கால் புல்லின் இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெய்யில், துண்டுகளாக்கி வைத்திருக்கும் புல்லின் இலை, சிறிது மஞ்சள் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.
இதை மேல்பூச்சாக பயன்படுத்துவதால், சீல் பிடித்த புண்கள் ஆறும். தோல்நோய்கள் சரியாகும். இது பூஞ்சை காளான்களை போக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட பறவைக்கால் புல், தோல்நோய்க்கு மருந்தாகிறது. பித்த சமனியாகிறது. வயிற்று போக்கை நிறுத்துகிறது. காய்ச்சலை தணிக்க கூடியது. வேர்வையை தூண்டும் தன்மை கொண்டது. உடல் வலியை போக்க கூடியது இது சோர்வை நீக்கும். பறவைக்கால் புல்லை வீட்டில் வளர்க்கலாம். இதன் விதைகளை தூவினால் புற்கள் நன்றாக வளரும்.

Post a Comment