0


கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.


பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது.

அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.

Post a Comment

 
Top