0

முருங்கை இலைச்சாற்றுடன் (10 முதல் 20 மி.லி.) சம அளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து அன்றாடம்  காலை வேளையில் குடித்து வருவதால் சத்துக் குறைபாடு, ரத்த சோகை, இருமல், ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி, தோலின் வறட்சி ஆகியன குணமாகும்.

முருங்கை இலைச்சாற்றுடன் தேனும் இளநீரும் சேர்த்துக் குடிப்பதால் இழந்த உடல் ஆரோக்கியமும் பலமும் திரும்பக் கிடைக்கும்.



கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும்முன் முருங்கைக்கீரைச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் பார்வை கூர்மை பெறும்.

நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தஉடன் முருங்கைக்கீரையோடு இரண்டு பல் பூண்டு, சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளைச் சேர்த்து அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுப்பதுடன் கடிபட்ட இடத்தில் சிறிதளவு தடவிவர நஞ்சு முறியும்... புண்ணும் விரைவில் ஆறிவிடும்.

முருங்கைக்கீரையை இடித்துச் சாறெடுத்து அதனோடு மிளகைப் பொடித்து சேர்த்துக் குழைத்து நெற்றியின் மீது பற்றாகப் பூசி வைக்க தலைவலி விரைவில் தணியும்.

அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ ஏற்பட்ட வீக்கங்கள் மீது முருங்கைக்கீரையை அரைத்து
மேற்பற்றாகப் பூச வீக்கம் வற்றும்.

முருங்கைப்பூ பிஞ்சான உடன் சேகரித்து தோலோடு சமைத்து சாப்பிட்டு வர மிகுந்த உடல் வெப்பத்தைத் தணித்து ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.

முருங்கை விதையைப் பொடித்து தேன் சேர்த்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டுவர, நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். ஆண்மை அதிகரிக்கும்.

முருங்கைப்பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி சொறி, சிரங்கு கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசிவர விரைவில் குணமாகும்.

முருங்கைப் பிசினை எண்ணெயில் இட்டுக் கரைத்தோ அல்லது காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டோ ஓரிரு சொட்டுகள் காதில் விட்டுவர காது புண்கள் ஆறும்.

முருங்கைப் பிசினைப் பாலில் இட்டுக் கரைத்து இரண்டு பக்க கன்னப் பொறியின் மீதும் பூசி வைக்க விரைவில் தலைவலி தணியும். இதையே நெறிக்கட்டிகளின் மீதும் பூசி வைக்க வீக்கமும் வலியும் குணமாகும்.எளிதாகப் பயிராகி தன் முழுப்பகுதியையும் மருந்தாக நமக்குத் தரும் முருங்கையை கடவுளுக்குப் படைக்கும் உயர்நிலையில் வைத்தது மிகவும் பொருத்தம் உடையதுதான்.

Post a Comment

 
Top