0

கால்நடைகளின் புண்களுக்கு ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இயற்கை  பூச்சிகொல்லியாகவும் உராய்வு காப்பு பொருளாகவும் இதன் எண்ணெய் தற்காலங்களில் பயன்பாட்டில் உள்ளது. கடுமையான  பல்வலி ஏற்பட்டால் இதன் இளங்குச்சியால் பல் துலக்கினால் பல் ஆட்டம், ரத்தம் கசிதல், பல்வலி நீங்கும். இதன் இலைகளை  வளக்கெண்ணெயில் வதக்கி கட்ட கட்டிகள் கரைந்து வலி நீங்கும். ஆறாத சிறங்குகள் இருந்தால் காட்டாமணக்கு எண்ணெயுடன்  தேங்காய் எண்ணெய் கலந்து பூசிவர சில நாட்ளில் புண் சிரங்கு ஆறும்.



சில தாய்மார்களுக்கு தாய்பால் போதுமான அளவில் சுரக்காது இவர்கள் ஒரு படி தண்ணீரில் ஒரு பிடி இலையை போட்டு  கொதிக்க வைத்து இளம் சூட்டில் அந்த தண்ணீரால் மார்பில் ஒத்தடம் கொடுத்து வெந்த இலைகளை மாபில் வைத்து கட்டி  வந்தால் இரண்டொரு நாளில் தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க தொடங்கும். மார்பகத்தை கழுவிவிட்டு  பால்கொடுக்கவேண்டும்.

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும் வயிற்றில் புண் உள்ளவர்களுக்கும் வாயில் புண் ஏற்படும். இவர்கள் காட்டாமணக்கு பாலை  துணியில் நனைத்து ரத்தம் கசியும் புண்களில் வைக்க ரத்தபெருக்கு நிற்கும். புண்கள் சீழ் பிடிக்காமல் குணமடையும்.  காட்டாமணக்கு வேரை பிடுங்கி அதன் பட்டையை தனியாக எடுத்து மைய அரைக்கவேண்டும். அதில் சுண்டைக்காய் அளவில்  பசும்பாலில் கலந்து குடித்தால் சோகை நீங்கும். வயிற்றுகட்டி பெருவயிறு குட்டம் ஆகியவை நீங்கும்..




Post a Comment

 
Top