பசியை தூண்டக் கூடியது. மணத்துக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: கடுகுப் பொடி, தேன். ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் விடவும். இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும்.
இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். கடுகை பயன்படுத்தி தொடர் விக்கலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கடுகு பொடியில் நீர் விட்டு குலைத்து, அதை மெல்லிய துணியில் வைத்து தொண்டைக்கு அருகே வைத்தால் விக்கல் சரியாகும். மஞ்சள் நிற பூக்களை உடைய கடுகு செடியை எளிதாக பயிர் செய்யலாம். கடுகு ஒற்றை தலைவலிக்கு மருந்தாகிறது.
ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும். அதிகளவில் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படும். பூச்சி, வண்டு கடி விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு. புளி ஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கடுகு பொடி, சீரகப் பொடி, பூண்டு, இஞ்சி, பெருங்காயப் பொடி, உப்பு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விடவும். இதில் 2 பல் பூண்டு தட்டி போடவும்.
சிறிதளவு இஞ்சி, கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது பெருங்காயம். சிறிதளவு கடுகுப் பொடி, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர புளி ஏப்பம் சரியாகும். அஜீரணம் கோளாறு, வயிறு உப்புசம் குணமாகும். கடுகு செடியை பயன்படுத்தி ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.
கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டவும். இதில் போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி, தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கடுகு ரத்தத்தை சுத்தப்படுத்தும். வலி நிவாரணியாக பயன்படுகிறது. வலியை குறைக்கும். மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கிறது.

Post a Comment