வயிற்று கடுப்பை சரிசெய்யும். வலி நிவாரணியாக விளங்குகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உணவில் சுவை, மணத்துக்காக சேர்க்கப்படும் புதினாவை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் பானம் தயாரிக்கலாம். இளநீர், சிறிது பனங்கற்கண்டுடன், 2 ஸ்பூன் புதினா இலை சாற்றை நன்றாக கலக்கவும். இதை குடித்துவர உடனடியாக புத்துணர்வு ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி சரியாகும். புதினாவை பயன்படுத்தி வெயிலினால் தோலில் ஏற்படும் கருமையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். சிறிது அதிமதுரப் பொடியுடன், சிறிது பன்னீர், சிறிது புதினா சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசினால், வெயிலின்போது ஏற்படும் கருமை போகும். தோலில் ஏற்படும் நமைச்சல் சரியாகும். புதினாவை பயன்படுத்தி வயிறு உப்புசம், மாந்தம் மற்றும் அஜீரண கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: புதினா இலை சாறு, பெருங்காயப் பொடி, இஞ்சி, சீரகப் பொடி, தேன்.பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில், நசுக்கிய இஞ்சி, அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது பெருங்காயப் பொடி, 2 ஸ்பூன் புதினா சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர வாயுவை வெளியேற்றும். பசியை தூண்டும். வயிற்று புண் ஆறும். புதினாவை பயன்படுத்தி உடல் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் சிறிது புதினா இலைச் சாறு, சிறிது கற்பூரம் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை பூசினால் வலி குறையும். தலை வலி, கை கால் வலி, மூட்டு வலிக்கு புதினா, வலி நிவாரணியாக பயன்படுகிறது.ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மை புதினாவுக்கு உண்டு. பல் வலி ஏற்படும் போது புதினாவை மென்று சாப்பிட்டால் வலி குறையும். புதினா பற்களுக்கு பலம் கொடுக்கிறது.

Post a Comment