0
சிலருக்கு உடலிலும், முகத்திலும் ரோமங்கள் வளர்ந்திருக்கும். இதனால் அழகு குறையும்.

இதற்கு பசும் மஞ்சளும், குப்பை மேனி இலையும் பயன்படுகிறது.

பசும் மஞ்சள் இலை மற்றும் குப்பை மேனி இலையை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

குளித்த பிறகு இந்த விழுதை உடலில் பூசிக் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


இப்படி செய்தால் உடனே முடி கொட்டிவிடாது. தொடர்ந்து செய்து வர முடியின் அடர்த்தி குறையும்.

முடி மென்மையாகி, கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் வளர்ச்சி குன்றி நாளடைவில் முடி வளர்வது நின்றுவிடும்.

மஞ்சளுக்கு முடியை மென்மையாக்கும் குணம் தான் உண்ட§ தவிர முடியை நீக்கும் தன்மை கிடையாது. அதனை குப்பைமேனி இலைதான் செய்கிறது.

Post a Comment

 
Top