0
கோடைகால தட்பவெப்ப நிலைக்கு தகுந்த வாறு உடலை பலப்படுத்தி உடலின் நச்சுத் தன்மை நீங்க புத்துணர்ச்சி குளியல் முறைகள் மிக  அவசியம் அவைகள் இதோ,

வாழையிலை குளியல்:

உடலில் உள்ள கெட்ட நீரினை வெளியேற்றி உடல், மனம் இவற்றின் இறுக்கத்தை குறைத்து புத்துணர்ச்சி அளித்து நல்ல உறக்கத்தை தரும். உடல்  பொலிவை ஏற்படுத்தி உடல் எடை குறைவதோடு தோல் நோய்கள் முக்கியமாக சொரியாஸிஸ் நோய் கட்டுப்படுகிறது.


வேப்பிலை குளியல்:

வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினி இக்குளியல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடலில் உள்ள அனைத்து நச்சுக்  கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் நல்ல மருந்தாகும்.

பல மூலிகை குளியல்:

உடல் முழுவதற்கும் நல்ல புத்துணர்ச்சி மருந்தாகவும், உடலினை வலுப்படுத்தவும் உடல் பொலிவை அதிகரிக் கவும், சரும நோய்களை  குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுகிறது.

சூரிய குளியல்:

இந்த குளியல் காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே உடலுக்கு நன்மை பயக்கும். மண் குளியல் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை முதலிய வற்றை குறைப்பதுடன் உடல் நிறத்தை  பொலி வாக்குகிறது.

Post a Comment

 
Top