எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும்.
சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அதனை சரியான முறையில் போடுங்கள்.
பொதுவாக மாத்திரைகளை சுட வைத்து அறிய நீரில்தான் போட வேண்டும். பாலுடனோ, காபி, டீயுடனோ போடுவது தவறு.
குழந்தைகளுக்கான மாத்திரைகளை பொடி செய்து நீரில் கரைத்துக் கொடுக்கலாம். சிறு குழந்தையாக இருப்பின் தாய்ப்பாலில் கரைத்தும் கொடுக்கலாம்.
சில மருந்துகள் தூளாக இருக்கும். அவற்றை உபயோகிக்க ஆரம்பித்து 7 நாட்களுக்குள் அதனை பயன்படுத்திவிட வேண்டும். பிறகு அவற்றை தூக்கி எறிந்து விட வேண்டும்.
வீட்டில் உள்ள மருந்துகளில் பயன்படுத்துவதற்கான கடைசி நாள் முடிந்த மருந்துகளை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள்.

Post a Comment