குளிர் காலத்தில் நோய்கள் நம்மை எளிதாக தாக்குகின்றன. தற்போது பலவிதமான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
ஒரு நாள் இல்லாமல் தொடர்ந்து காய்ச்சல் அடித்து வந்தால் மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி ரத்த பரிசோதனை செய்வதும் அவசியமாகிறது.
வந்திருக்கும் காய்ச்சல் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட பின்னர்தான் சிகிச்சையைத் துவக்குகின்றனர் மருத்துவர்கள்.
மேலும், உண்ட உறவு ஜீரணமாவதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் சற்று எளிதான உணவுகளை உண்பதால் வயிற்றுக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.
சருமம் வறண்டு போய்விடும் காலம் இது. எனவே, கை, கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், தலைக்கு எண்ணெய் வைப்பதும் நமது சருமத்தை பாதுகாக்கும் வழிகளாகும்.

Post a Comment