ஒருவர் உயரமாக இருப்பதும், குள்ளமாக இருப்பதும் அவர் கையில் இல்லை. அது பெற்றோரின் உயரம், ஜீன்களைப் பொறுத்தது.
மனிதனின் சராசரி உயரம் 6 அடி. இளம் பருவத்தில்தான் ஒருவரது உடல் உச்சக்கட்டத்தை அடைகிறது. எனவே 18 வயதுக்கு மேல் 30 வயதுள்ள இளைஞர்கள் 5 அடியைத் தாண்டி இருந்தால் நல்ல வளர்ச்சிதான்.
ஒரு சிலருக்கு ஒரு சில காலத்தில் ஆக வேண்டிய உயரம் சரியாக இருக்காது. அதாவது அவருடைய வயதுக்கும், உயரத்திற்கும் மாறுபாடு ஏற்படும்.
அந்த சமயத்தில் எளிதான உடற்பயிற்சிகள் மூலம் உடல் உயரத்தைக் கூட்டலாம்.
பெற்றோர் இருவருமே குள்ளமாக இருக்கும்பட்சத்தில், அவர்களது குழந்தைகளும் குள்ளமாகவே இருப்பார்கள். ஆனால் சில பயிற்சிகளின் மூலமாக அவர்களது உயரத்தை சராசரியான அளவிற்கு மாற்றலாம் என்கிறது தற்போதைய மருத்துவம்.
.jpg)
Post a Comment