சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதேப்போல நமது உடல் நலம் நன்றாக இருந்தால்தான் மற்ற கடமைகளை சரியாக செய்ய முடியும்.
இன்றைய அவசர உலகில் எல்லாவற்றையும் கவனிக்கும் நாம் உடல் நலனை மட்டும் மறந்து விடுகிறோம்.
உடல் நலனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள மருத்துவ பரிசோதனை மட்டும்தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம்.
பரிசோதனை செய்யாமல் சாதாரண நிலையிலும் நமது உடல் நலத்தை நாமே சோதித்து ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.
உடல் நலத்தை அளவிடும் அடிப்படை அம்சங்கள் ஐந்து. அதாவது, நமது உயரம், உடல் எடை, உடலில் உள்ள கொழுப்பு அளவு, செரிமானத் திறன், ஞாபகத் திறன் ஆகியவற்றைக் கொண்டு நமது உடல் நலனைக் கணக்கிடலாம்.
இதில் ஒவ்வொன்றும் எவ்வளவு இருக்கிறது என்று உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொண்டால் போதும். இப்போது உங்களுக்கே புரியும். நீங்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று.

Post a Comment