குழந்தைகள் வளர்ந்து சொந்த அடையாளம் (Identity) பெற்று பெரியவர்கள் ஆகும் வரை பல போராட்டங்களை சமாளிக்க நேரிடுகிறது. வாழ்க்கையில் பல மாற்றங்கள் (குடும்ப நபர் இறப்பு, புது குழந்தைப் பிறப்பு, இடமாற்றம்) ஏற்படும் போது, சாதாரணமாக குழந்தையின் நடத்தையிலோ (எதிர்த்துப் பேசுவது, அடம் பிடிப்பது...), உணர்ச்சியிலோ (சோகம், கோபம்...) மாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதான். இந்தத் தவறான மாற்றங்களால், குழந்தைகள் அந்தசூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் போது, காலப்போக்கில் தானாகவே மறைந்து விடும்.
சில தருணங்களில் குழந்தைகள், தொடர்ந்து தவறான நடத்தை (Behavior) மற்றும் உணர்ச்சிகளை (Emotions) வளர்த்துக்கொள்கிறார்கள். அது அவர்களின் ஆளுமையாகவே மாறி குழந்தையின் மனநலப் பிரச்னைக்கு வித்திடுகிறது. இவ்வித உணர்ச்சி மற்றும் நடத்தை கோளாறுகள், வளர்ச்சியில் தாமதம் ஏற்படும் குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றன. ஏனெனில், திறன்கள் குறைபாடு உள்ள காரணத்தால், இக்குழந்தைகளால் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போகும். அதோடு, குடும்பச் சூழ்நிலையும் பெற்றோரின் வளர்ப்புமுறையும் இவ்வித மனநலப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு பெரும் பங்களிக்கின்றன.
பல நேரங்களில் குழந்தை சோகமாகவோ, தனிமையாக இருந்தாலோ, அதிகமாக கோபப்பட்டாலோ, அதை பெரிய விஷயமாக பெற்றோர் கருதுவதில்லை. பொதுவாக பெற்றோருக்கு தங்கள் குழந்தைக்கு இவ்வகை பிரச்னை உள்ளது என கண்டுபிடிப்பது கடினம். தங்கள் குழந்தையின் நடத்தையில்/உணர்ச்சி வெளிப்பாட்டில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பார்த்து சரி செய்ய பார்ப்பார்கள். பள்ளியிலும் கலந்தாலோசித்து, அதற்கு தீர்வு காண முற்படுவார்கள். அப்படியும் பலனின்றி போனால், குழந்தை நல
மருத்துவரையோ, உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
எப்போது இதை முக்கியமாக கருதி சிகிச்சை பெற வேண்டும்?
காலம்: எந்தவித முன்னேற்றமும் இன்றி குழந்தையின் நடத்தையில் எந்தமாற்றமும் காணப்படவில்லை எனில்...
தீவிரம்: நடத்தையின் தன்மை தீவிரமாக இருக்கும்போது மற்றவருக்கு பயமேற்படுத்தும் வகையில் கோபத்தில் கத்துவது, திடீரென தனிமையை நாடுவது, விரக்தியாக பேசுவது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது...
வயது: சில நடத்தைகள், குழந்தையின் வயதிற்கேற்ப சரி, தவறு என பிரித்துப் பார்க்க முடியும். உதாரணத்துக்கு... 2 வயது குழந்தை கத்தி அழுவது சரி; ஆனால், அதே விஷயத்தை 5 வயது குழந்தை செய்தால் அது தவறு என சக வயது குழந்தைகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும். எல்லாக் குழந்தைகளும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய மாட்டார்கள் என்றாலும், வயதொத்தகுழந்தைகளின் நடத்தையில் இருந்து பெரிய அளவில் வித்தியாசப்பட்டால் அதை கவனத்தில் கொள்வது மிக அவசியம்.
இம்மூன்று விஷயங்களையும் மனதில் கொண்டு சந்தேகப்படும்படி தோன்றினால், பெற்றோர் தங்கள் குழந்தையை உடனடியாக உளவியல் நிபுணரிடம் சென்று ஆலோசனைப் பெறுவது நல்லது. இப்படிச் செய்தால், பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் மனநலப் பிரச்னைகளில் இருந்து குழந்தையைகாக்கலாம்.
பொதுவாக குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் நடத்தை பிரச்னைகளைஇருவிதமாக பிரிக்கலாம்...
1. வெளிப்படுத்துதல் (Externalizing) வகை
2. உள்ளுக்குள்ளே வைத்துக் கொள்ளுதல் வகை (Internalizing). ‘வெளிப்படுத்துதல்’ மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும், அவர்களின் நடத்தை மற்றவர்களுக்கு தொந்தரவு (சத்தமாக அழுவது, அடம்பிடிப்பது, கத்துவது, மற்றவரை சீண்டுவது...) அளிக்கும் வண்ணம் அமைவதால், இக்குழந்தைகள் பெரும்பாலும் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
‘உள்ளுக்குள்ளே வைத்துக் கொள்ளுதல்’ மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு உள்ளேயே போராடுவதால், வெளியே எளிதில் தெரியாது (பதற்றம், சோகம், உடல் வலி...). இதனால், பல நேரங்களில், இக்குழந்தைகளின் பிரச்னையைப் பெற்றோர் கவனிக்க தவறுகின்றனர். ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே இவர்கள் ஆலோசனைக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். குழந்தைகளை தாக்கும் முக்கியமான மனநல கோளாறுகள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
உமா ஏன் இப்படி இருக்கிறாள்?
ரேகாவுக்கு தன் மகள் உமாவுக்கு ஏதோ பிரச்னை என்று மட்டும் புரிந்தது. ஆனால், என்னவென்று கண்டுபிடிக்க தெரியவில்லை. சில நேரங்களில் உமா தன் அறையில் அழுது கொண்டே இருப்பதை பார்த்துள்ளார். பின்னர், உமா மிகவும் அமைதியாகவும் சோகமாகவும் இருந்திருக்கின்றாள். இது குறித்து உமா பெற்றோரிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒரு சில நேரங்களில் காரணமே இல்லாமல் மிகுந்த கோபம் கொள்வாள். எளிதில் எரிச்சல் அடைவாள். அதுமட்டுமல்ல... தொடர்ந்து எதையாவது சாப்பிட்டு கொண்டே இருந்தாள். இத்தனைக்கும் இதற்கு முன் ஒல்லியாக இருப்பதை பெருமையாக நினைத்தவள்தான் அவள். பள்ளி இல்லாத நேரங்களில் எப்போதும் தூங்கிக் கொண்டே இருந்தாள்.
ரேகா தன் மகள் டீன்ஏஜ் பருவத்தை நெருங்குவதால் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என நினைத்தாள். கணவரோ மகளை குழந்தைநல மருத்துவரிடம் அழைத்து சென்றார். அங்கு உமாவை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டது. ஆலோசகரிடம் உமா தான் சாக விரும்புவதாகவும், பலநேரங்களில் தற்கொலை எண்ணம் வருவதாகவும் கூறினாள். உமாவுக்கு மனச்சோர்வு (Depression) இருப்பதாகக் கண்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சைவழங்கப்பட்டது. இப்போது அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

Post a Comment