மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சிக்குன் குன்யா வருவதற்கான வாய்ப்புள்ளது. சிக்குன் குன்யா வந்தால் காய்ச்சல் மட்டுமின்றி கை, கால் மூட்டுகளில் அதிக வலி, வீக்கம், கை, கால்களை மடக்க முடியாத அளவுக்கு வேதனை ஏற்படும். பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் இந்நோய் வருகிறது. இதனால், கடுமையான வலி, காய்ச்சல், வயிற்றுபோக்கு, தலைலி போன்றவற்றை ஏற்படும்.
சிக்குன் குன்யா வரமால் தடுக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளையில், சுமார் 2 வாரங்கள் குடித்துவர சிக்குன் குன்யா, தொற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம். அகத்தை சீராக வைத்துக்கொள்ளும் தன்மை சீரகத்துக்கு உள்ளது.
சீந்தில் கொடியை பயன்படுத்தி, சிக்குன் குன்யா நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். சீந்தில் கொடியின் தண்டு பகுதியை துண்டுகளாக்கி நசுக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர சிக்குன் குன்யா குணமாகும். மூட்டு வலி குறையும். சீந்தில் கொடியின் தண்டுப்பகுதி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட சீந்தில் கொடி மரத்தில் படர்ந்து காணப்படும். மணித்தக்காளி போன்று சற்று பெரிய காய்கள், பழங்களை கொண்டது. ஆயுள் வளர்க்கும் மருந்தாக விளங்குகிறது. காய்ச்சலை போக்கும் தன்மை உடையது. வீக்கத்தை குறைக்கும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிக்கன் குன்யாவால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை குறைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விடவும். இதில், ஆவார இலைகளை போட்டு வதக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும்.
மெல்லிய பருத்தி துணியில் ஆவார இலையை வைத்து இளஞ்சூட்டுடன் மூட்டு வலி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் வலி மறையும். எலும்புகள் முறிந்தால் ஆவரையை வைத்து கட்டுவதால் விரைவில் குணமாகும். மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். கொசுக்கள் கடிக்கும்போது சிக்குன் குன்யா வரும். எனவே, சுற்றுப்புறத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
அடிக்கடி வரும் தலைவலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். முருங்கை கீரையின் சாறு எடுத்து, சிறிது மிளகு சேர்த்து கலந்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும். முருங்கை சாறு, மிளகோடு சிறிது உப்பு சேர்த்து குடித்தால் உடல் வலி, தலைவலி குணமாகும்.
நன்றி
தினகரன்

Free Spins No Deposit at Slots Casino | 2021 - Casino Roll
ReplyDeleteFree Spins 윌리엄힐 No 토토 사이트 직원 모집 Deposit 아트그라비아 장주님 At Slots Casino Online · 1. Voted Best 벳썸 도메인 Casino Online UK · 2. Claim Your Bonus From Slots Casino · 3. 룰렛 판 Find an Exclusive Site with