1


வயிற்றுபோக்கு, வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக விளங்குவதும், அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டதுமான நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. நாவல் பழத்தை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். சர்க்கரை அல்லது வெல்லக் கரைசலை கொதிக்க வைக்கவும். இதனுடன் நாவல் பழத்தின் பசையை சேர்க்கவும். இது, பாகு பதத்தில் வரும். இந்த பாகுவுடன்தண்ணீர் சேர்த்து குடிக்கும்போது வயிற்று கோளாறுகளான வயிற்று வலி, பேதி, சீதபேதி குணமாகிறது.



தற்போது சீசன் என்பதால் நாவல் பழம் எளிதில் கிடைக்கிறது. நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு உன்னதமான பழமாக விளங்குகிறது. நாவல் பழத்தின் கொட்டை சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. நாவல் பழத்தின் கொட்டையை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்து தயாரிக்கலாம்.  நாவல் பழத்தின் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி கிடைப்பது நாவல் சூரணம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் அளவுக்கு நாவல்  சூரணம் எடுக்கவும்.  இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறையும்.நாவல் மரத்தின் பட்டையை பயன்படுத்தி வாய்ப்புண், அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.நாவல் மரத்தின் பட்டையை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

இதை கொண்டு  வாய் கொப்பளிக்கும்போது கிருமிகள் வெளியேறும். பற்கள் ஆரோக்கியம் பெறும். ஈறுகள் கெட்டி தன்மை அடையும். புண்களை கழுவினால் விரைவில் ஆறும். பல்வேறு நன்மைகளை கொண்ட நாவல் மரத்தின் பட்டை நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது.வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு உடலில் ஏற்படும் அரிப்பை போக்கும் மருத்துவத்தை காணலாம். செடி, கொடிகளில் இருக்கும் புழுக்கள், பூச்சிகள் நமது உடலில்படும்போதோ, கடிக்கும்போதோ தோலில் சிவப்பு தன்மை, அரிப்பு, தடிப்பு, வலி உண்டாகும். இதற்கு நல்லெண்ணெய் தீர்வாக உள்ளது. நல்லெண்ணெய்யை  தோல் மீது பூசுவதால் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்.

நன்றி
தினகரன்

Post a Comment

  1. Harrah's Casino Hotel, Las Vegas, NV - Mapyro
    Find all information and best deals of Harrah's Casino Hotel 군포 출장안마 in 안산 출장안마 Las 정읍 출장마사지 Vegas 나주 출장샵 (Las Vegas, NV), USA 부산광역 출장안마 - Mapyro® provides accurate and local guides,

    ReplyDelete

 
Top