0

கோவையினத்தைச் சேர்ந்த பெருங்கிழங்குடைய ஏறு கொடி. தமிழகமெங்கும் தன்னிச்சையாய் வளர்கிறது. கசப்புச் சுவையுடைய கிழங்கே மிகவும் மருத்துவப் பயனுடையது. உடல் தேற்றவும் உடல் பலம் மிகுக்கவும் மருந்தாகும்.

1. கொட்டைப்பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய் நரி குரங்கு பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும்.

2. புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் நஞ்சும் அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.

3. கிழங்கைத் தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு உப்பு புளி நீக்கி உணவு உண்டு வரப் பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

4. 5 கிராம் கிழங்குப் பொடியை 100 மி.லி. நீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட்டு வரச் சீதப்பேதி தீரும்.

5. 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கீல் வாதத்துக்குப் பற்றிட குணமாகும்.


நன்றி
தினகரன்

Post a Comment

 
Top