செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை “மார்ஷ் மாலோ” என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர்.
இது நம் உடலுக்கு மிகவும் நல்லது. செம்பருத்தி இலைகளில் உடல்நலம் பேணும் இன்னும் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது. செம்பருத்தி இலைகளில் உள்ள உடல் நல நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. புற்றுநோயை எதிர்த்து போராடும் செம்பருத்தி இலைகள் புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல் நல பயனாக இது பார்க்கப்படுகிறது.
அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்றுநோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம். செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல் நல பயனாக உள்ளது. -ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
உடலில்உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்ப வெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல் நலபயனாகும். செம்பருத்தி இலை கலந்ததே நீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக பாருங்கள்.
நன்றி
தினகரன்

Thankyou for your help my dear healthshortly .blogspot
ReplyDelete