0

இரவு அதிகநேரம் விழித்திருந்து வேலை செய்தல் அல்லது இரவு நேரத்தில் டிவி, கம்ப்யூட்டரில் மூழ்கி கிடப்பதால் அதிகாலை  சூரிய உதயத்தை பலரும் பார்ப்பது அரிதாக உள்ளது. அவர்களுக்கு அதிகாலை என்றால் அது காலை 10 மணிதான். இதனால்  உடல் அளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக செரிமான தொந்தரவு அவர்களை உடனடியாக தொற்றிக்  கொள்ளும். மேலும் உடல் எடையும் அதிகரிக்கும்.

ஆனால், ஸ்லிம்’ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை  தவிர்த்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை  சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்து  விட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில்  தெரியவந்தது.

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு  செய்யப்பட்டது. அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக  தெரிவித்தனர். நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி  54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள். வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும்  இளைஞர்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண் விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அதிகாலை எழுந்து அரை  மணி நேரம் நடைபயிற்சி , யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். இதனால் மன இறுக்கம் தளர்ந்து  உற்சாகம் பிறக்கும். மேலும் உடலும் வலுவாகும். பின்னர் அன்றைய நாளை நாம் இனிதாக கழிக்கலாம்...

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top