பப்பாளி இலையை பயன்படுத்தி வைரஸ் காய்ச்சலை தடுக்கக் கூடிய, ரத்தத்தில் பிளேட்லெட் அணுக்களை அதிகரிக்கச் செய்யும் மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பப்பாளி இலை, இஞ்சி, தேன். பப்பாளி இலையை பசையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 3 ஸ்பூன் பப்பாளி இலை பசையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு கொதிக்க வைத்து தேநீராக இதை தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து பருக வேண்டும். பப்பாளி இலையானது சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், புளு காய்ச்சல், டைபாய்டு, நிமோனியா இப்படி நம்மை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக அமைகிறது. கை கால் வலி ஆகியவற்றிற்கு நிவாரணம் ஏற்படும். இதை தினமும் காலை மாலை 50 மிலி முதல் 100 மிலி வரை எடுத்து வர நிவாரணம் கிடைக்கும். மேலும் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றையும் இது தடுக்கும்.
பப்பாளியின் விதைகளை பயன்படுத்தி வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அகற்றும் மருந்தை தயார் செய்யலாம். பப்பாளி விதைகள் 20 எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை டம்ளர் நீர் எடுத்து கொதிக்க வைத்து கால் டம்ளராக சுருக்கிக் கொள்ள வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் பின்னர் இதனுடன் இனிப்பு சுவைக்காக ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருக வேண்டும். இது வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றும் மருந்தாக இது பயன்படுகிறது. இவ்வாறு பப்பாளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மருந்தாகவும், சிறந்த உணவாகவும் நமக்கு பயன்படுகிறது.

Post a Comment