மூளை காய்ச்சலை குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றை தலைவலியை சரிசெய்யும் தன்மை இதில் உள்ளது.
சாமந்தி செடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூட்டு வலியை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒருபிடி அளவுக்கு சாமந்தி இலை மற்றும் தண்டு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்தால் இடைவிடாத இருமல் சரியாகும். நெஞ்சக சளியை கரைத்து வெளியே தள்ளும். காய்ச்சலை தணிக்கும். உடல் வலி சரியாகும். மூட்டு வலி குணமாகும்.
சாமந்தி பூவை பயன்படுத்தி பால்வினை நோயை குணப்படுத்தும், ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு சாமந்தி பூவின் இதழ்களை எடுத்துக் கொள்ளவும், அதனுடன் சிறிது மிளகுப் பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால், ரத்த ஓட்டம் சீராகும். ஒற்றை தலைவலி குணமாகும். மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. கல்லீரல் பலப்படும்.
சாமந்தி பூவை அதிகளவில் பயன்படுத்தினால் அது வாந்தியை உண்டாக்கும். எனவே, அதிகளவில் பயன்படுத்த கூடாது. சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதிலாக பூண்டு பயன்படுத்தலாம்.

Post a Comment