உடலுக்கு குளிர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் ஏற்படுத்துகிறது. சிறுநீரகத்தில் கற்களை சேராமல் தடுக்கும் ஆற்றலும் இந்த வெட்டி வேர் குடிநீருக்கு உள்ளது. 20 லிட்டர் அளவு கொண்ட பானையில் நீரை எடுத்து அதில் ஒரு பிடி வெட்டி வேரை போட்டு வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு இரண்டு நாட்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மணம் மிகுந்த குடிநீர் கிடைக்கிறது. வெயில் காலத்தில் வெட்டி வேரை ஊற வைத்த நீரை பருகுவதால் நீர் சுருக்கு எனப்படும், வெயில் கால அவஸ்தையான சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வேதனை போன்றவற்றை இதை தணிக்கிறது. சிறு நீர் பாதையில் ஏற்படும் கற்களால் உண்டாகும் வலி ஆகியவற்றையும் வெட்டி வேர் நீர் போக்குகிறது.
வெட்டிவேரால் செய்யப்பட்ட பாயை தயார் செய்து ஜன்னல், வாசல் போன்ற இடங்களில் தொங்க விட்டு அதில் நீர் தெளித்து அதன் மூலம் உருவாகும் வாசனை காற்றை சுவாசிப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுகிறது. வெட்டி வேர் நீரால் உடலை கழுவுவதால் வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு உள்ளிட்ட வெயில்கால தொல்லைகள் நீங்குகின்றன. அதே போல் நாம் நன்னாரி ஊறல் நீரின் மருத்துவ குணங்களை பற்றி இப்போது பார்க்கலாம். நன்னாரி வேர் பொதுவாக அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் பரவலாக கிடைக்கும்.
நன்னாரியால் செய்யப்படும் சர்பத்தை நாம் அனைவரும் வெயில் காலங்களில் பருகுவதுண்டு. இதுவும் உடலுக்கு நன்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய உணவு பொருளாகும். நன்னாரியை நாம் தினமும் குடிநீராக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு துண்டு நன்னாரி வேரை சுமார் 4 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். இது போன்ற ஊறல் நீர் தயாரிக்கும் போது இவற்றை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது.
நன்னாரி,வெட்டி வேர் போன்றவற்றின் மணம் குறையும் வரை அதை நீரில் ஊறலாக போட்டு பயன்படுத்தலாம். அப்போது வரை அவற்றின் மருத்துவ குணம் குறைவதில்லை. நன்னாரி குடிநீர் பருகுவதால் சிறுநீரக கோளாறுகள் விலகுகின்றன. எரிச்சல் இல்லாமல் போகிறது. உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை கொடுத்து உடலுக்கு இதத்தை அளிக்கக் கூடியதாக அமைகிறது. அதே போல் ஓமத்தை பயன்படுத்தி தேநீர் தயார் செய்யலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் ஓமத்தை ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை ஒரு டம்ளர் அளவுக்கு சுருக்கி பின் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.ஓமம் உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியது என்பதால் கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது. ஓமம் மிகச் சிறந்த அளவில் பேதியை கட்டுப்படுத்தக் கூடியது.
செரிமான கோளாறு, வயிறு மாந்தம், வயிற்றில் இரைச்சல் ஏற்பட்டு கழிசல் ஏற்படும் நிலை ஆகியவற்றை சரி செய்யும் குணம் ஓம குடிநீருக்கு உள்ளது. வயிற்று வலியை போக்கக் கூடியது. வயிற்று போக்கை நிறுத்தக் கூடியது. பெருங்குடலை பலப்படுத்தக் கூடியது. இவ்வாறு பல்வேறு வழிகளில் ஓமம் வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது. இவ்வாறு நாம் அன்றாடம் கிடைக்கும் பல்வேறு பொருட்களை கொண்டு குடிநீர் மற்றும் தேநீர் தயாரித்து பருகி வர உடல் ஆரோக்கியத்துடன் விளங்கும்.

Post a Comment