0

ஆவாரை எனப்படம் ஆவரசு ஒரு காய கல்ப மூலிகை. சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூபூத்து மண்டிக்கிடக்கிறது. இதன் அனைத்து பகுதிகளும்  சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள், பூ, கிளைகள், காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ் சக சூர  ணம் தயா ரித்து அதை தொடர்ந்து உப யோ கித் தால் சர்க் கரை வியாதி குண மா கும்.



 நமது உட லில் இருக் கும் பல மில் லி யன் செல் களி லும் சேரும் கழி வு களை நீக்க முடியாமல் போகும் போது தான் வியாதிகள் வருகின்றன  என்பது நமது நாட்டு வைத்திய தத்துவும். இந்த செல்களில் இருக்கும் ப்ரீராடி கால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன.

 ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு,  புண், எலும்பைப் பற்றிய ஜூரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும். பூவை வதக்கி கண் நோய்க்கும் ஒத்தடமிடலாம்..

Post a Comment

 
Top