வயிற்று கோளாறுக்கு அற்புத மருந்தாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் கொண்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் அதிகளவில் கிடைக்கும். சிறு இலந்தையை பயன்படுத்தி சுவையின்மை, பசியின்மைக்கான மருந்து தயாரிக்கலாம்:
தேவையான பொருட்கள்: இலந்தை பழம், உப்பு, நாட்டு சக்கரை, காய்ந்த மிளகாய். 10 இலந்தை பழத்தை நசுக்கி எடுக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய் பாதியளவு எடுத்து விதைகளை நீக்கிவிட்டு சேர்க்கவும். சிறிது உப்பு, நாட்டு சர்க்கரை, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கும்போது பசியின்மை சரியாகும். உடல் புத்துணர்ச்சி ஏற்படும். பசியை தூண்டும். செரிமானத்தை உண்டாக்கும். இலந்தை பழத்தை பயன்படுத்தி இலந்தை அடை தயாரிக்கலாம்.
இலந்தை பழத்தின் கொட்டையை நீக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது நாட்டு சக்கரை, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பிசையவும். அடைகளாக தட்டி வெயிலில் காய வைத்து எடுக்கவும். இதை நெல்லிக்காய் அளவுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர செரிமானம் தூண்டப்படும். பசியின்மையை போக்குவது மட்டுமின்றி, பித்தத்தை சரிசெய்யும். வயிறு உப்புசம், குமட்டல் குணமாக்கும். இலந்தை பழத்தை கொண்டு சளி, இருமல், உடல் சோர்வுக்கான மருந்து தயாரிக்கலாம்.
5 இலந்தை பழம் நசுக்கி எடுக்கவும். சிறிது மிளகு, சுக்கு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கும்போது நெஞ்சக சளியை கரைந்து வெளியேறும். இருமல் தணியும். பித்த சுரப்பியை சமன்படுத்தும். மலச்சிக்கலை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சோர்வு நீக்கி புத்துணர்வை தருகிறது.
இலந்தை மரத்தின் பட்டை, துளிர் இலைகளை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் கடுப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். இலந்தை மரப்பட்டையை துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இலந்தை இலை பசை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தயிர் சேர்த்து கலந்து குடித்தால் குடல் பகுதியில் ஏற்படும் புண்கள் ஆறும். நோய் நீக்கியாக பயன்படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது.
ஆசனவாயில் ஏற்படும் கடுப்பை சரிசெய்கிறது. இலந்தை இலையை பயன்படுத்தி புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயுடன், இலந்தை இலை கொழுந்து பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து வடிகட்டி எடுக்கவும். இதை மேல்பூச்சாக போடும்போது கொப்பளங்கள், நாள்பட்ட கட்டிகளை குணமாக்குகிறது. புண்கள் ஆறும்.

அற்புத மருந்தாகிறது. இலந்தை பழம் நன்றி!!!
ReplyDelete