0

ரத்த கசிவை போக்கவல்லதும், சர்க்கரை நோயை தணிக்க கூடியதும், விந்தணுவை அதிகரிக்க செய்வதும், செரிமானத்தை சீர்செய்ய கூடியதுமான கருவேலம் .

ஏரிகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கருவேலம், மஞ்சள் நிற பூக்களை உடையது. கொத்தவரை போன்ற காய்களை கொண்டது. 6 விதைகளை உடையது. கருவேல மரத்தின் பூக்கள், இலை, பட்டை ஆகியவை மருந்தாகிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழிக்கு ஏற்ப பற்களை வலுவாக்கும் தன்மை கொண்டது கருவேலம். கருவேலம் குச்சியை பயன்படுத்தி பல் துலக்குவதால், ஈறுகளில் வீக்கம், வலி குறையும்.



கருவேலம் மரப்பட்டையை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருவேலம் மரப்பட்டையை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேனீராக குடிக்கலாம். இது கருப்பை வீக்கம், இறக்கம் மற்றும் வெள்ளைப்படுதலுக்கு மருந்தாகிறது. மூலத்தை சரி செய்வதுடன், ரத்தக் கசிவை போக்கும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதிலாக மிளகு சேர்த்து குடிக்கலாம்.  

கருவேல மரத்தின் பட்டை அற்புத மருந்துவ குணம் கொண்டது. இது சர்க்கரை நோயை தணிக்க கூடியதாகிறது. வயிற்று வலியை போக்கும் தன்மை உடையது.  கருவேலம் பிசினை பயன்படுத்தி நுரையீரல் தொற்று, சிறுநீர் தாரையில் ஏற்படும் பிரச்னை, ஆண்களுக்கு விந்தணு குறைபாட்டை போக்கும் தேனீர் தயாரிக்கலாம்.இரவு முழுவதும் ஊற வைத்த பிசினுடன், அரை ஸ்பூன் நெய், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

கஞ்சி வடிவில் வந்தவுடன் காய்ச்சிய பாலை தேவையான அளவு சேர்க்கவும். இதை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு பலம் பெறும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும். பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது.   கருவேலம் இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்ற கூடிய மற்றும் மூலத்துக்கான வெளிப்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கருவேலம் இலை பசையை விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து கொள்ளவும். இது புண்களுக்கு மேல்பூச்சு, மூலத்துக்கான வெளிப்பூச்சு தைலமாகிறது.

கருவேலம் இலைகள் அற்புதமான மருந்தாகிறது. எரிச்சலை தணிக்க கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. வலியை குறைக்கும். நோய்களை ஆற்றும் தன்மை உடையது. செரிமானத்தை சீர்செய்ய கூடியது. செரிமானம் தடைபடும்போது மூலம் ஏற்படும். ரத்த மற்றும் வெளி மூலத்தை சரிசெய்கிறது. வயிற்றை பாதுகாக்கிறது. ஆசனவாய் புற்று வராமல் தடுக்கிறது. கருவேலம் இலை பசையுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால், சீத, ரத்த கழிச்சல் சரியாகும். உணவுப்பாதையில் ஏற்படும் புண்கள், அழற்சியை சரிசெய்யும். மலத்தை கட்டக்கூடியது.

Post a Comment

 
Top