காய்ச்சலை போக்கக் கூடிய மருந்தாகவும் மர மல்லிகை விளங்குகிறது.
மர மல்லிகை பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், காய்ச்சலை போக்கக் கூடிய ஒரு தேநீரை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். மர மல்லிகை பூக்கள், மிளகு பொடி, தேன். 10 மர மல்லிகை பூக்கள் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் மிளகு பொடி சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து பருகி வர வேண்டும்.
இது காய்ச்சல், ஆஸ்துமா மூச்சு திணறல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. மேலும் இந்த பூக்களை காய வைத்து சாம்பிராணி போல புகையாக பிடித்து வந்தால் மூச்சு திணறல் படிப்படியாக குறையும். அதே போல் மூக்கடைப்பு இருக்கும் சமயத்தில் வெந்நீரில் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவை விலகும். நீர்கோர்வையும் குறையும்.
இந்த தேநீர் வாயில் இருக்கும் பூஞ்சைகளை அகற்றக் கூடியதாக உள்ளது.
இவற்றின் இலைகள், பூக்களை தேநீராக தயாரித்து சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் அல்சர், பூஞ்சைகள் இவற்றிற்கு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. நுண் கிருமிகளின் தாக்குதலை போக்கக் கூடியதாக அமைகிறது. ஆன்டி பயாட்டிக்காகவும் இது பயன்தரக் கூடியது. பித்த சமனியாகவும் இது வேலை செய்கிறது. மேலும் மர மல்லிகை இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் மர மல்லிகை இலைகள், சீரக பொடி, பனங்கற்கண்டு. மர மல்லிகை இலைகள் 5 அல்லது 6 எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவு சீரக பொடியை சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் விட்டு கஷாயத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். இதை பருகுவதால் காய்ச்சல் தணிகிறது. தலைவலி குறைகிறது. உடலில் வலி இருந்தால் அதை போக்கி ஊக்கத்தை அளிக்கிறது. இது வலியை போக்கும் குணம் கொண்டதாக விளங்குவதால் உடல், மூட்டு வலிகளை போக்கக் கூடியதாக உள்ளது.

Post a Comment