0

தோல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. அதே போல் இதை தேநீராக ஆக்கி உள்ளே அருந்தும் போது வயிற்று புண்கள் போன்ற கோளாறுகளை நீக்குகிறது. அதே போல் இதை வாழை இலையை போல சாப்பாட்டிற்கு வைத்து சாப்பிடுவதும் பயன் அளிக்கிறது. பலா இலைகளை ஒன்றாக தைத்து அதில் உணவு வைத்து சாப்பிடும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் உள்ளது. பலா பழத்தின் பால் நுண் கிருமிகளை அளிக்கக் கூடியதாக விளங்குகிறது. பலா பழம் அதிகமான சத்து கொண்ட உணவாக விளங்குகிறது.
அதிக நார்சத்து கொண்டதாக பலா பழம் உள்ளது. வைட்டமின் சி அதிகமாக உள்ளது. உடலுக்கு தேவையான தாதுக்கள் இதில் மிகுந்து காணப்படுகிறது. பலா பழத்தை தொடர்ச்சியாக அளிப்பதன் மூலம் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை கொண்டு உணவு ஒன்றை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள். பலா பழ பிஞ்சுகளை சிறுதுண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் பட்டை,  பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, நெய். சுவைக்காக சிறிது உப்பு, மிளகு.

ஒரு சிறிய வாணலியில் நெய்யை சிறிதளவு எடுத்து சூடாக்க வேண்டும். பூண்டை தட்டி அதில் போட வேண்டும். சூடானதும் ஒரு துண்டு பட்டையை அதில் சேர்க்க வேண்டும். பின்னர் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். இவற்றை வதக்கிய பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள பலா பிஞ்சை அதில் சேர்க்க வேண்டும். பலா பிஞ்சின் பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக நெய்யில் இதை வறுக்க வேண்டும்.

பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு நீர் விட்டு இதை வேக விட வேண்டும். இதை ஒரு சூப்பாக பருகலாம். இதனுடன் மிளகுபொடி அல்லது காய்ச்சிய பால் அல்லது தேங்காய் பால் இவற்றுடன் சேர்த்தும் இதை பருகலாம். பால் அல்லது தேங்காய் பால் சேர்க்கும் போது மிதமான சூட்டில் இருக்கும் போது சேர்த்தால் பதமாக இருக்கும்.

மேலாக லேசாக கொத்துமல்லி இலையை தூவினால் இதை பார்க்கும் யாருக்கும் இதை பருக வேண்டும் என்ற ஆசை வந்து விடும். பலாவில் வைட்டமின் சி, ஏ போன்றவை மிகுதியாக காணப்படுவதால் உடலுக்கு வலுவை தருகிறது.. எலும்புகளுக்கு பலத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. இதில் இருக்கும் நார்சத்து மலச்சிக்கலை போக்கக் கூடியது. மெக்னீஷியம் உடலுக்கு வலுவை தரக்கூடியது. புற்றுநோய் வராமல் பலா தடுக்கிறது.

Post a Comment

 
Top