0

உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். தாதுக்களின் எரிச்சலை தணிக்கும். இதன் இலையை அரைத்து கரப்பான், தொழுநோய்புண் மீது வைத்து கட்டி வர விரைவில் ஆறும். சிலருக்கு ஆசனவாயில் எப்பொழுதும் நமைச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் ஆகாயத்தாமரையின் இலைகளை தண்ணீர்விடாமல் மைய அரைத்து கோவணத்தில் வைத்து ஆசனவாயில் வைத்து கட்டி வர நமைச்சல் நீங்கும். மூலநோயும் தீரும்.



இதன் முழு செடியும் சுட்டு சாம்பலாக்கி அதை எச்சில் தழுப்பு, கரப்பான் மீது பூசி வர  அவை நீங்கும். இளைச்சாற்றை புதியதாக எடுத்து 25மிலி சாற்றுடன் 5மிலி தேன் கலந்து காலை, மாலை 5 நாட்கள் குடிக்க மார்பக நோய்கள் போகும். நீர்சுருக்கு மூலம், சீதபேதி இருமல் உள்ளவர்கள் இதை மூன்று நாட்கள் மூன்று வேளை குடித்தால் குணம் ஏற்படும்.

இலைளை எடுத்து சுரசம் செய்து அதனுடன் பன்னீர் சர்க்கரையும் கூட்டி  இருமல் இரைப்பிருமலுக்கு கொடுத்தால் குணமடையும். உள் மூலம் உள்ளவர்கள் இதன் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை வேருடன் நீங்கும். காலையில் எழுந்தவுடன் சிலருக்கு கண் எரிச்சல், ஏற்படும். பகலில் அது அதிகமாகும். கண்களிலிருந்து சிலநேரம் நீர்வடியும்.

கண் விழி்த்தால் எப்படி இருக்குமோ அதே போன்று எப்பொழுதும் அவதிபடுபவார்கள். இவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கிட்டு குளித்து வர உடல்சூடு, கண்ணெரிச்சல் மூல நோய்கள் நீங்கும்.

இலையை சாறு பிழிந்து சரசஞ்செய்து அதை தெளித்த பிறகு 50மிலி வீதம் எடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்தால் பெண்கள் நோய் தீரும். இலையை காடிநீரில் வேகவைத்து நீரை பிழிந்து விட்டு திப்பியை எடுத்து  குட்டத்தால் ஏற்பட்ட புண், கரப்பான் அழுகிரந்தி இலைகளை வைத்து கட்டினால் குணமாகும். கைப்பிடி அரிசி சிறிது தேங்காய்பால் அந்தரத்தாமரை இலை ஒன்று சேர்த்து சமைத்து சீதபேதிக்கு கொடுத்தால் தீரும்.

மூட்டுபூச்சிகள் உள்ள இடங்களில் இதன் இலையை போட்டு வைக்க இதிலிருந்து உண்டாகும் சாறு காற்றில் மூட்டுபூச்சிகள் ஓழியும்.

ஆகாயத்தாமரை தைலம்

தண்ணீரில் மிதப்பது என்றவுடன் வெங்காயத்தாமரையை சிலர் ஆகாயத்தாமரையாக நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இரண்டும் வேறுவேறு குணங்களும் அமைப்பும் கொண்டவை.

ஆகாயத்தாமரையின் சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் 1லிட்டர் எடுத்து இரண்டையும் கலந்து காய்ச்சவேண்டும் நீரின் சடசடப்பு நீக்கியவுடன் மெழுகு போன்று உருவாகும். அதில் கிச்சலிகிழங்கு, சந்தனத்தூள் வெட்டிவேர் கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி ஆகியவற்றை தனித்தனியாக 10கிராம் அளவில் பொடித்து போட்டு ஓன்றாக கலந்தவுடன் இறக்கி வடித்து கொள்ளவேண்டும். இதுவே ஆகாயத்தாமரை தைலம் எனப்படும்.

Post a Comment

 
Top