0

கானா வாழையை பயன்படுத்தி பொன்னுக்கு வீங்கிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பிடி அளவு கானா வாழை இலைகளுடன், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், பொன்னுக்கு வீங்கி குணமாகும். தொண்டை வலி மற்றும் வீக்கம் சரியாகும். வாழையை போன்ற தன்மை கொண்ட கானா வாழையானது, காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. சீதள நோய்களை சீர்செய்ய கூடியது.



கானா வாழை குரல்வளையில் ஏற்படும் நோய்களை குணமாக்கும். தொண்டை சதை அழற்சியை சரிசெய்யும். சளியை போக்கும் மருந்தாகிறது.  கானா வாழையை பயன்படுத்தி மலேரியா காய்ச்சலை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பிடி அளவு கானா வாழை இலைகள், சிறிது மிளகு பொடி, அரை ஸ்பூன் சீரகம் எடுத்துக்கொள்ளவும். நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் மலேரியா, டைபாய்டு காய்ச்சல் குணமாகும். மண்ணீரல் வீக்கம் சரியாகும். ஒரு வேளைக்கு 30 கிராம் அளவுக்கு கானா வாழை இலை எடுத்துக் கொள்ளலாம்.

கானா வாழை இலையை பயன்படுத்தி நெறிக்கட்டு, வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். கானா வாழை இலை பசையை அரை ஸ்பூன் விளக்கெண்ணையுடன் லேசாக சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும். சிறுதுண்டு வாழை இலையை லேசாக சூடுபடுத்தி எடுக்கவும். பின்னர், வதக்கி வைத்த இலை பசையை வாலை இலைக்குள் வைத்து வீக்கம், கட்டி இருக்கும் இடத்தில் வைத்து கட்டவும். இவ்வாறு செய்தால் நெறிக்கட்டு, வீக்கம் சரியாகும். மார்பக கட்டி, அக்குளில் ஏற்படும் நெறிக்கட்டு போன்றவற்றை கானா வாழை சரிசெய்யும் குணம் கொண்டது.  பல்வேறு நன்மைகளை கொண்ட கானா வாழையை பாசி பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இது உடலுக்கு நன்மையை கொடுக்கும்.


Post a Comment

 
Top