மனிதன் உயிர்வாழ அடிப்படை தேவை உணவு. மக்கள் உண்ணும் உணவு, பழக்கவழக்கம் போன்றவையே அவனது உடல் நலத்தை தீர்மானிக்கிறது. மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் போக்கும் சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது. இயற்கை உணவுமுறை, இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தால் உடல்நலத்தையும், மன நலத்தையும் பாதுகாக்க முடியும்.
அத்தோடு அன்றாடம் நடைப்பயிற்சியையும் மேற்கொண்டால் உடலில் கூடிய கொழுப்பையும் கரைக்கலாம். ஆரோக்கியமான உடலையும் பெறலாம்.சமையல் முறைகள் இன்று நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுகின்றன. உணவகங்கள் பெருகியுள்ளன. சத்துக்காக சாப்பிட்ட காலம் மறந்து, சுவைக்காக உண்ணும் வழக்கம் நடைமுறைக்கு வந்து விட்டது. அட்டை பெட்டிகளில், பாலித்தீன் பைகளில் பதப்படுத்தி அடைத்த உணவுகள், துரித உணவுகள் வழக்கத்திற்கு வந்துள்ளன.
நாகரீக வளர்ச்சி, பண்பாட்டு பரவல், இனக்கலப்பு, சுவைமிகு உணவுகளால் உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உடலுக்கு வலிமை, வளர்ச்சியை தருவது உணவு. நமது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை கொள்கை, பழக்கவழக்கம், சமூக அமைப்பு, வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் மாற்றத்தை உண்டாக்கவல்லது உணவு.
உயிர், உடலை வளர்க்கும் அமுதம் உணவு. பசி வந்திட பத்தும் பறந்துபோகும் என்பது உலகறிந்த உண்மை. பசியின் கொடுமையை பசிப்பிணி என்னும் பாவி என மணிமேகலை கூறுகிறது. உணவே மருந்து: உயிர், உடலோடு கூடிய சூழ்நிலையில் புறச்சூழலோடு எப்போதும் போராடிக் கொண்டே இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் உடல்நலமாகும். தோல்வி அடைந்தால் நோயில் முடியும். இந்நோயை நீக்கி நலமளிப்பது
மருந்தே. நமது சமையல், தொன்றுதொட்டு மருத்துவ முறைப்படியே சமைக்கப்படுகிறது. வெயிலோடு வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு புழுங்கல் அரிசியே ஏற்றது. அன்றாட சமையலில் பூண்டு, சீரகம், இஞ்சி, பெருங்காயம், வெங்காயம் போன்ற மருத்துவ குணமுள்ள உணவுகளை சேர்த்து கொள்கிறோம்.
அன்றாட உணவில் சேர்க்கும் உணவுப் பொருட்களிலுள்ள மருத்துவ குணம் இதோ!
மஞ்சள் -நெஞ்சு சளியை போக்கும்.
கொத்தமல்லி - பித்தத்தை போக்கும்
மிளகு - தொண்டை கரகரப்பை துரத்தும்
சீரம் - வயிற்று சூட்டை தணிக்கும்
வெங்காயம் - குளிர்ச்சியை உண்டாக்கி ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
பூண்டு - பசியை தூண்டும்.
இஞ்சி - பித்தத்தை ஒடுக்கி காய்ச்சலை கண்டிக்கும்.
தேங்காய் - நீர்க்கோர்வையை நீக்கும்.
கறிவேப்பிலை - மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்கும்.
நல்லெண்ணெய் - குளிர்ச்சி, அறிவுத்தெளிவை உண்டாக்கும்.
சீரகம், பூண்டு கலந்த மிளகுநீர் - சூட்டை தணித்து செரிமான ஆற்றலை அதிகரிக்கும்.
கீரை - உடலுக்கு வலுவூட்டி, கழிவுகளை அகற்றும்.
தவிர்க்க வேண்டியவை:
நோய்க்கு முதல் காரணம் உப்பு. இவற்றை அளவோடு உண்பது நல்லது. உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம், கருவாடு, வடகம், உருளைக்கிழங்கு சிப்ஸ், வாழைக்காய் சிப்ஸ், புளித்த மோர், கொழுப்பு சத்து அதிகமுள்ள இறைச்சி, முட்டை மஞ்சள்கரு, வெண்ணெய், பாலாடை, நெய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காரமும், புளிப்பும் கூடாது. நொறுக்கு தீனி வயிற்றுக்கு கேடு. எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவை உண்ணக்கூடாது. நொறுக்குத்தீனி கூடவே கூடாது.
உண்ணும் முறை: எளிதில் செரிக்கக்கூடிய பழம், காய்கறி, பருப்பு, பால், கோதுமை, அரிசி போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். நாச்சுவை கருதி உண்ணாமல் உடல்நலம் கருதி உண்ண வேண்டும். சாப்பிடும்போது வேகமாக விழுங்கக்கூடாது. மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாயிலிருந்து தேவையான அளவு உமிழ்நீர் சுரந்து செரிமாணம் ஆகும். உமிழ்நீர் கலக்காத உணவு வயிற்றுக்குள் சென்றாலும் செரிக்காது. குடலும் செரிமாண ஆற்றலை இழந்துவிடும்.
ரத்தத்தை தூய்மைப்படுத்தவும், உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதிலும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். குறைந்தது 2 லிட்டர் அளவாவது சிறுநீர் வெளியேற வேண்டும். சாப்பிடும்போது இடையே இடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.
வயது ஏற ஏற கொழுப்புச்சத்து அதிமுகள்ள உணவுகளை குறைக்க வேண்டும். முறையான உணவு பழக்கவழக்கத்தை கடைப்பிடித்தால் நீண்ட நாள் நோயின்றி வாழலாம். சாப்பிடுவதற்காக வாழாமல், வாழ்வதற்காக சாப்பிட்டால் உடலுக்கு மருந்து என்பது அவசியமில்லை. அளவோடு உண்போம்! நோயின்றி வாழ்வோம்!

Post a Comment