0
காலைல லேட்டா எழுந்தாலே முதல்ல இந்தப் பிரச்சினைதான் வரும். ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போறவங்க எல்லாரும் பரபரப்பா அப்போ தான் கிளம்பிட்டு இருப்பாங்க. அதனால, எல்லா வேலையும், வீட்ல வேகவேகமா நடக்கும். அந்த வேகத்தில குளிச்சா தலையைக் கூட ஒழுங்கா துவட்ட மாட்டோம்.


அப்படியே அந்த ஈரத்தலைல எண்ணெயைத் தேய்ச்சிடுவோம். அப்புறம் என்ன ஜலதோஷம்தான். தும்மல், இருமல், மூக்கடைப்பு, தலைவலின்னு எல்லாம் வரிசையா வரும். சரி, இந்த ஜலதோஷம் நமக்கு மட்டும்தான் வருதான்னு நீங்க ரொம்ப `பீல்' பண்ணா தீங்க. அதைப் பற்றி எனக்கு தெரிஞ்ச சில தகவலை உங்களுக்கும் சொல்றேன்.

ஜலதோஷம்ங்கறது ஒருவித அலர்ஜி சம்பந்தமான நோய். இது வந்தா, 3 அல்லது 4 நாட்கள் வரை இருக்கும். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி இருக்குற நோய் தான். மனிதர்களுக்கு `ரைனோ' என்ற வைரசின் மூலம் ஜலதோஷம் உண்டாகுது.

இந்த வைரஸ் 130 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையை கூடத் தாங்குமாம். இதை முழுமையாக அழிக்க எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம். ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எல்லாம் ஜலதோஷத்தால் உருவாகும் தலைவலியை மட்டும்தான் போக்குமாம்.

Post a Comment

 
Top