கடையில் மருந்தை வாங்கும் போதும் சரி, வீட்டில் ஏற்கனவே பயன்படுத்திய மருந்தாக இருந்தாலும் சரி, முதலில் மருந்தின் கடைசி நாள் என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் முடிந்திருந்தால் அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள்.
மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பதும் தவறு.
ஒருவருக்கு அளித்த மருந்தை மற்றொருவர் பயன்படுத்துவதும் மிகவும்
தவறு. மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
ஒருவருக்கு எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் தான் கொடுக்க வேண்டும். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக உடலை பலகீனப்படுத்திவிடும்.
சில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என அளவுகளில் வித்தியாசப்படும். எனவே. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

Post a Comment