டீ.வி விளம்பரத்தில் மயங்கி கண்ட எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம். ஆரோக்கியமான எண்ணெயைத் தேர்வு செய்து அதனை உபயோகிக்கவும்.
காலை டிபன் முடிந்த வரை வேக வைத்த உணவுகள் புட்டு, இடியப்பம், இட்லி, பயிறு வகைகளை சாப்பிடவும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை விட, சாதாரண எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் உடலுக்கு நன்மை அதிகம்.
எந்த உணவையும் எண்ணெயில் வேக வைப்பதை விட, ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது நலம் தரும்.
குழந்தைகளுக்கும் அதிகமாக பொரித்த உணவுகளைக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டாம்.
சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயின் வகையை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.

Post a Comment