நீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
அந்த எண்ணெய் எந்த விதத்தில் அமைகிறது என்பதையும் கண்டறிந்து கொள்ளுங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததேத் தவிர ரீபைண்ட் ஆயில் என்று கடைகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் அல்ல.
சுத்திகரிக்கப்பட்டப்பட்ட எண்ணெய்களில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது. இதனால் உடலுக்கு எந்த நலனும் கிடைப்பதில்லை. கெடுதல்தான் விளைகிறது.
எனவே, கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவற்றை வாங்கி அதனை சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.
ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாமல் அவ்வப்போது எண்ணெய் வகைகளை மாற்றிக் கொண்டிருப்பதும் உடலுக்கு நல்லது.

Post a Comment