ராஜன், அதிகாலை 6 மணிக்கு கண் விழிக்கிறார். குளித்து முடித்து அலுவலகம் கிளம்ப ஒன்பதாகி விடுகிறது. ஆறுமணி வரை வேலை... வேலை... அதன்பிறகுதான் அவருக்கு சுதந்திரம். வீடோ, ஹோட்டலோ, நண்பர்களோ... சனி, ஞாயிறுகள் என்றால் பூரண சுதந்திரம். விரும்பிய இடத்துக்குச் செல்லலாம்... விரும்பிய வேலையைச் செய்யலாம். அவருடைய மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அமரேந்திரன்... பாவம்!
அமரேந்திரனுக்கு எக்காலத்திலும் சுதந்திரம் இல்லை. ஒருநாளும் அவன் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிந்ததில்லை. 6 மணிக்கு கண் விழிக்கிற அமர், அரக்கப்பரக்க குளித்து, யூனிஃபார்முக்குள் உடலைத் திணித்துக்கொண்டு, ஷூ, சாக்ஸை மாட்டிக்கொண்டு எதையாவது அள்ளி வயிற்றை நிரப்பிக்கொண்டு, பேருந்தைப் பிடிக்க ஓடவேண்டும். வகுப்பறைக்குள் நுழைந்து விட்டால் படிப்பு... எழுத்து... மனப்பாடம்... மாலை நான்கு மணிக்கு பள்ளி அவனை விடுவிக்கிறது. கலைந்த முடியும், குலைந்த மனமுமாக வீட்டுக்கு வந்தால் வம்படியாக இழுக்கிறது டியூஷன்... அதை முடித்து வீட்டுக்கு வந்தால் அடுத்து, வீட்டுப்பாடம்... எட்டு மணிக்கு எதையாவது தின்றுவிட்டு உறங்கியாக வேண்டும்...
அப்படி உறங்கினால்தான் அடுத்தநாள் விடியலுக்கு ஆயத்தமாக முடியும். அது போகட்டும்... ராஜனுக்கு வாய்ப்பது போல, சனி, ஞாயிறாவது வாய்க்கிறதா..? அன்றைக்கும் டியூஷன். வீட்டுப்பாடம்... ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷ் கிளாஸ்... இந்தி கிளாஸ்...அதுவும் போகட்டும்... காலாண்டு, அரையாண்டு என்று கிடைக்கிற ஒரு சில வார விடுமுறையிலாவது அமர் வாழ்கிறானா என்றால் அதுவும் இல்லை. வந்து தொலைந்துவிடுகின்றன சிறப்பு வகுப்புகள்... இந்தாண்டு அரையாண்டு விடுமுறை யில் தனியார் பள்ளிகளைப் பார்த்து, அரசுப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு போட்டு விட்டார்கள்.
சரி... அதுவும் போகட்டும்... முழு ஆண்டு விடுமுறை விடுகிறார்களே... அதுவாவது அவனுக்குக் கிடைக்கிறதா என்றால் அங்கேயும் சோகம் தான். வீட்டுக்குள்ளேயே வந்து தூக்கிச் சென்று விடுகின்றன சம்மர் கேம்ப்கள். இப்போது, பள்ளிகளும் கூட கேம்ப்களை கடைவிரித்து விடுகின்றன. காலை 6 மணிக்கு டென்னிஸ். எட்டு மணிக்கு கிரிக்கெட், 10 மணிக்கு நீச்சல்... இப்படி மாலை வரைக்கும் பேக்கேஜ் ஃபிக்ஸ் பண்ணி பணத்தை யும் குழந்தையையும் அள்ளிச்சென்று விடுகிறார்கள். ராஜனுக்கு வாய்ப்பது கூட பிள்ளைக்கு வாய்க்க வில்லை... நகரங்களில் வளர்கிற பெரும்பாலான பிள்ளைகள் அமரேந்திரன்களாகத்தான் வளர்கிறார்கள்.
அவர்களுக்கான வாழ்க்கையை பால்யம் விலகும் காலம் வரை அவர்கள் வாழ்ந்து பார்க்கவே முடிவதில்லை. பெற்றோரும், ஆசிரியரும், வேறெவருமோதான் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்களின் இதயத்தில் தானாக வெடித்துக் கிளம்பி வெளிவரும் பால்யம், மொட்டாகவே கருகி. மரத்து, தடித்து, தட்டையாகிப் போகிறது. அது பிற்கால வாழ்க்கை முழுதையும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தை, விருப்பம் போல தூங்கி எழுந்து, ஷூ போடாத காலில் மண்ணை மிதித்து, தன் வீட்டைச் சுற்றியிருக்கும் பல்வேறு தரப்பட்ட நண்பர்களுடன் தொட்டுப்பழகி, தனக்குப் பிடித்த விளையாட்டை தப்பும் தவறுமாக விளையாடி கற்று தன்னைப் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை யாருமே இங்கு குழந்தைகளுக்குத் தருவதில்லை.
குறிப்பாக, நடுத்தர, மேல்தட்டுக் குழந்தைகள்... இதுமாதிரியான வளர்ப்புமுறை குழந்தையின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் என்று கல்வியாளர்களும், உளவியலாளர்களும், மருத்துவர்களும் கொடுக்கிற குரல், சாதனை போதையில் இருக்கும் பெரும்பாலான பெற்றோரின் காதுகளில் விழுவதேயில்லை. தங்களால் ஆகாதவற்றை, மற்றவர்களின் பிள்ளைகள் செய்வதை தங்கள் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்கிற ஆவேசத்தில், போட்டிகளைக் கடந்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு இருக்கையை உறுதி செய்து தரவேண்டிய நிர்ப்பந்தத்தில் பெற்றோர் குழந்தையின் தனித்துவத்தையும் உணர்வுகளையும் மதிக்காமல் தங்களுக்குத் தகுந்தவாறு வளைத்து, நெளித்து வளர்க்கிறார்கள். பள்ளியும் சமூகமும் அதை ஊக்குவிக்கிறது.
ஆசிரியர்கள், அதிகாரிகள், பெற்றோர் இணைந்த இந்தக் கூட்டணியில் குழந்தைகள் தன்னை அறியாமல் வர்த்தகப் பொருளாகி விடுகின்றன. ‘‘விடுமுறை என்பது ஏன் விடப்படுகிறது என்பதை சமூகத்தில் யாருமே அறிவதில்லை. சில பெற்றோர் விடுமுறையில் பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை நினைத்து அஞ்சுகிறார்கள். சில குழந்தைகளுக்கு விடுமுறையை உணரக்கூட நேரமில்லை. சிறப்புப் பயிற்சி, தனிப் பயிற்சி, சம்மர் கேம்ப்கள்... காலாண்டு, அரையாண்டு தேர்வுக்காலங்களிலும், முழு ஆண்டு தேர்வு முடிந்தும் ஏன் விடுமுறை விடப்படுகிறது என்றால், ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிச்சூழலில் ஏற்பட்ட இருண்மை களில் இருந்து விடுபட்டு வேறு சிந்தனைகளில் ஈடுபட்டு உடலையும் மனதையும் புதுப்பித்துக்கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான்.
முன்பெல்லாம் கோடை விடுமுறை முடிந்து பிள்ளைகள் பள்ளிக்கு வந்ததும் ஆசிரியர்கள் ஒரு கட்டுரைப்போட்டி நடத்துவார்கள். விடுமுறையை எப்படி கழித்தார்கள், எங்கெல்லாம் சென்றார்கள், எந்த உறவுகளை எல்லாம் சந்தித்தார்கள் என்பது பற்றியெல்லாம் மாணவர்கள் அதில் விரிவாக எழுதுவார்கள். அது அற்புதமான தருணம். ஓராண்டு வகுப்பறைக்குள் அவர்கள் கற்றுக்கொண்டதை விட அதிக பாடங்களை அந்த விடுமுறைக்காலம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கும். இன்றுள்ள குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.
விடுமுறை என்பது இன்னொரு வகுப்புக்கான, கட்டுப்படுத்தலுக்கான, அடங்கிப் போவதற்கான களம். அவ்வளவுதான். மாமா வீட்டுக்கு, தாத்தா வீட்டுக்கு, சித்தி வீட்டுக்கு, அத்தை வீட்டுக்குச் சென்று கட்டற்று விளையாடி, அங்குள்ள உறவுகளை எல்லாம் பார்த்து, கொண்டாடி, வயற்காடு, கொல்லைக்காடுகளில் சுற்றித்திரிந்து, பாம்பு, பல்லி, ஓணான்களை எல்லாம் பார்த்து ரசித்து, சமூகத்தையும் சுற்றத்தை யும் உணர்ந்து கொள்வதற்குத்தான் விடுமுறை.
வகுப்பறைக்குள் படித்த அறிவியலையும் புவியியலையும் அவன் போக்கில், சமூகத்தில் பொருத்திப் பார்ப்பதற்கான ஏற்பாடுதான் விடுமுறை. பாடப்புத்தகத்தை விட்டு விலகி தனக்கு விருப்பப்பட்ட கதைகளையும் தலைவர்களையும் படித்தறிந்து வகுப்பறையை கடந்தும் வேறு ஓர் உலகம் இருப்பதை தனக்குத்தானே புரிந்து கொள்வதற்காகத்தான் விடுமுறை. ஆனால், நகரத்தில் வசிக்கிற பெரும்பாலான குழந்தைகளுக்கு விடுமுறை நாளும் ஒரு வதைநாளாகத்தான் கழிகிறது. பெற்றவர்கள் என்ன சிந்திக்கிறார்களோ, அதை மட்டும்தான் குழந்தைகள் சிந்திக்க வேண்டும். அப்படித்தான் இங்கே குழந்தைகள் வார்க்கப்படுகிறார்கள்.
ரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிதையில் சொல்வார். நான் என் மேசை மீது அமர்ந்து கொண்டு என்னிடம் இருக்கும் வெள்ளியையும் தங்கத்தையும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தை குப்பை மேட்டில் அமர்ந்து உடைந்த குச்சிகளால் ஒரு வீடு கட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. குப்பைமேடும் உடைந்த குச்சியும் அந்தக் குழந்தைக்குக் கொடுக்கிற மகிழ்ச்சியை இந்த தங்கமும் வெள்ளியும் எனக்குத் தரவில்லையே...இப்படித்தான் இருக்கிறது இன்றைய பெற்றோரின் நிலை. குழந்தைக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது..? என்று பெற்றோர் அறிவதில்லை. ஏன்... அவர்களுக்கே எது மகிழ்ச்சி என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
விலையுயர்ந்த உடை, நகைகள், ஷூக்கள்... தேவைக்கும் சக்திக்கும் மீறி எதைக்கேட்டாலும் வாங்கித்தருகிற தாராளம்... இதெல்லாம் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. குழந்தையை உணராமல், அவர்களின் சின்ன இதயங்களில் உதிக்கும் கனவுகளை, கற்பனைகளை மதிக்காமல் அவர்களை உண்மையாக சந்தோஷப்படுத்தவே முடியாது. மோல்டட் சைல்டுகளாகவே அவர்களை வெளிக்கொண்டு வரமுடியும். விடுமுறை என்பது சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும், கள அனுபவங்களைப் பெறுவதற்குமே. ஒரு வகுப்பறையில் இருந்து இன்னொரு வகுப்பறைக்கு மாற்றுவதற்கு அல்ல... என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. சம்மர் கேம்ப்கள் இப்போது வர்த்தகமயமாகி விட்டன.
கோடை விடுமுறை விடுவதற்கு முன்பே இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பர வலையை வீசத்தொடங்கி விடுகின்றன. நல்ல அறுவடை இருப்பதால் சில பள்ளிகளே இந்த சம்மர் கேம்ப்களை நடத்துகின்றன. விடுமுறையை ஊர்சுற்றி வீணாக்காமல் (?) உபயோகமாக மாற்றும் வகையில் எந்தெந்த பயிற்சி வகுப்புகளில் எல்லாம் சேர்க்கலாம் என்பதை இப்போதே பெற்றோர் யோசிக்கத் தொடங்கி விட்டார்கள். கடந்தாண்டு முதல் பேக்கேஜ் சிஸ்டம் வந்து விட்டது. கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல், ஸ்கேட்டிங்... சோகம் என்னவென்றால் இதெல்லாம் விளையாட்டு என்ற உணர்வே குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை. அத்தனை புரொஃபஷனல். கண்டிப்பு... குழந்தை விரும்புகிறதோ இல்லையோ, வளைத்து நெளித்து வார்த்து எடுத்துவிட வேண்டும்.
“பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்படுவதற்கு 2 காரணங்கள். ஒன்று, ஓய்வு... மற்றொன்று, தன்னைப் புதுப்பித்துக் கொள்ளல். கற்றல் சூழல் என்பது இருண்மை நிறைந்ததாக மாறிவிட்டது. மதிப்பெண்களைத் தாண்டி வகுப்பறையில் எதைப்பற்றியும் யோசிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் தேர்வுகள் முடிந்தபிறகு ஆசிரியர்களும் சரி, மாணவர்களும் சரி... தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கு Sabbatical லிமீணீஸ்மீ என்ற பெயரில் சம்பளத்துடன் கூடிய நீண்ட விடுமுறை வழங்கப்படுகிறது.
காரணம், வகுப்பறைச் சூழலில் இருந்து விலகி ஆசிரியர்கள் சிறிது காலம் தங்களுக்கு விருப்பப்பட்ட வேலையை செய்து விட்டு வரவேண்டும் என்பதுதான். அப்படி வருகிற பட்சத்தில் அவர்கள் உற்சாகமாகவும் உத்வேகமாகவும் வருவார்கள். அவர்களால் புதிதாக சிந்திக்க முடியும். அமெரிக்காவில் நான் தங்கியிருந்தபோது ஒரு சலூனுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண் தான் எனக்கு ஹேர்கட் செய்தார். அந்தப் பெண், ஒரு பெரிய நிறுவனத்தின் செகரட்ரி. விடுமுறையின் போது சலூனுக்கு வந்து ஹேர்கட் செய்வார். இது அவருக்குப் பிடித்தமான வேலை. இதை அமெரிக்கா போன்ற பல மேலைநாடு கள் அங்கீகரிக்கின்றன. விடுமுறை என்பது, வழக்கமான வதையில் இருந்து விலகி பிடித்ததை செய்வதற்கான நாள்.
அண்மைக்காலத்தில் கல்வி என்பது சுமையான விஷயமாகி விட்டது. இதை எல்லோரும் அறிவார்கள். குறிப்பாக தனியார் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் வயதுக்கும் மூளைக்கும் மீறியதாக இருக்கிறது. குழந்தைகள் அவற்றையெல்லாம் படித்து முடிப்பதற்குள் திணறித்தான் போகிறார்கள். அடுத்தவீட்டுப் பிள்ளையை விட தங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் பெற்று முன்னிலைக்கு வரவேண்டும் என்ற வேட்கையில், தாங்களும் ஆசிரியர்களாகி வீட்டிலேயே பெற்றோர் வகுப்பறையை நடத்துகிறார்கள். குழந்தைகள் பாடப்புத்தகங்களுக்குள் மூழ்கி கரையேற முடியாமல் தவிக்கின்றன. இப்படிப்பட்ட சிக்கலான சூழலில் விடுமுறை என்பது குழந்தைகளுக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
நன்றாக தூங்கி எழ வேண்டும். அண்ணன், தம்பிகள் அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு ஓடிப்பிடித்து விளையாட வேண்டும். தாங்கள் வாங்கிய புதிய பொருட்களை பிறரிடம் காட்டி மகிழ வேண்டும். எல்லோரோடும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். அதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான எந்த வாய்ப்பையும் பெற்றோர் தருவதில்லை. மந்தைத்தனமாகவே பிள்ளைகளை வளர்க்கிறோம். விடுமுறையில் குழந்தை தன்னை புதுப்பித்துக்கொள்ள 3 வழிகளை கல்வி நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். முதலாவது, இயற்கையான சூழலோடு குழந்தையை ஒன்றச் செய்வது.
பறவைகளோடும், விலங்குகளோடும், பிற உயிரினங்களோடும் அண்டச் செய்து இயற்கையுடனான தன் பிணைப்பை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது. இன்னொன்று, கலைகள் மூலம் குழந்தையை குதூகலப்படுத்துவது. கலை என்றவுடன், நடனப்பயிற்சி, இசைப்பயிற்சி என்று மீண்டும் ஒரு கண்டிப்பான ஆசிரியரிடமும் பள்ளியிடமும் குழந்தையைத் தள்ளிவிடக்கூடாது. குழந்தைகளை கற்பனை செய்யவிட்டு அல்லது நாடகக் குழுக்களோடு இணைத்து அவர்களை பாத்திரமாக்குவது. இதன்மூலம் அவர்களின் கிரியேட்டிவிட்டியை அவர்கள் போக்கில் மேம்படுத்துவது. மூன்றாவது, குழந்தைகளின் தேடலையும் விருப்பத்தையும் அறிந்து அதில் இணைப்பது. சில குழந்தைகளுக்கு வானவியலில் ஆர்வம் இருக்கும். சில குழந்தைகள் வேளாண்மையை விரும்புவார்கள். சில குழந்தைகள் ரோபாடிக்ஸில் ஈடுபாடு காட்டுவார்கள்.
அவர்களின் விருப்பத்துக்கேற்ற துறைகளில் செயலறிவைப் பெறச் செய்வது. பள்ளிகள் அப்படியல்ல... எல்லா குழந்தைகளையும் ஒரே வரிசையில் நிறுத்துகின்றன. அவர்களின் தனித்துவத்தை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, வாழ்க்கையை நிர்மாணிப்பதற்கு உதவாத ஒற்றைக் கல்வியை அவர்களின் மூளைக்குள் செலுத்துகின்றன. மத்திய, உயர் மத்தியக் குடும்பத்துப் பிள்ளைகளே இதற்கு பெரிதும் இலக்காகிறார்கள். பயிற்சி பயிற்சி என்று அவர்களை வதைத்து கற்பனாசக்தி அற்ற நீர்த்துப்போன தலைமுறைகளாக அவர்களை உருவாக்குகிறோம். அதன் விளைவை எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்வோம்... என்கிறார் கல்வியாளரும், பேராசிரியருமான ச.மாடசாமி.
குழந்தைகள் உளவியலாளர் டாக்டர் ராணி சக்கரவர்த்தியும் மிகவும் கவலையுடன் இவர்களின் குரலோடு இணைகிறார். “நிறைய நாட்டுக்கோழிகள் இருந்தன. தெருவெங்கும் உலவி, தேவையான தீனியைத் தேடித்தின்று, ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தன. கோழியின் எடையை அதிகரித்தால் இன்னும் கூடுதலாக பலன் கிடைக்குமே என்று யோசிக்கத் தொடங்கியபிறகு பிராய்லர் கோழி வந்தது. பிராய்லர் கோழிகளால் நடக்க முடியாது. ஓட முடியாது. நேரடியாக சூரிய ஒளியில் வாழ முடியாது. எடை மட்டும் அதிகமாக இருக்கும். அதன் தோல், சிறகு எதிலும் வலு இல்லை. லேசாக பட்டாலே தோல் கிழிந்து விடுகிறது. சிறகு முறிந்து விடுகிறது. ஆனால், எடை சற்று கூடுதலாகத்தான் இருக்கிறது.
நாட்டுக்கோழிகள் போல் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் இருந்த நம் பிள்ளைகளை, இப்போது பிராய்லர் கோழிகளைப் போல மாற்றிவிட்டோம். புழுதியில் விளையாடி, நிலத்தில் புரண்டு, காயம்பட்டு அந்த மண்ணையே மருந்தாகப் போட்டுக்கொண்டு ஏரிகளிலும் குளங்களிலும் தானாகவே நீச்சல் பழகி வாழ்ந்த குழந்தைகளே சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எல்லாம் கடந்து வெற்றிகரமான மனிதர்களாக வாழ்ந்தார்கள். இன்றைய குழந்தைகள் அறைகளின் வெப்பத்தில் வெம்முகின்றன. மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகள் என்றால் உணவு, காற்று, உறைவிடம், உடை... குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளில் இதோடு விளையாட்டும் சேர்கிறது. குழந்தைகளின் இயல்பே விளையாடுவதுதான்.
தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தைகள் விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால், வெளியில் அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. செலவு செய்து படிக்க வைக்கிறோம். படிப்பு முடிந்ததும் அவர்கள் சம்பாதிக்க வேண்டும். போட்ட முதலீட்டை ரிட்டன் எடுக்க வேண்டும்... தன்னை அறியாமலே பல பெற்றோர் இப்படியான நிலைக்கு வந்து விடுகிறார்கள். அதனால்தான் டி.வி.யையும் செல்போனையும் கம்ப்யூட்டரையும் பழக்கி ஜீனியஸாக்க முயற்சிக்கின்றனர். 3வது வகுப்பில் இருந்தே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். ஆங்கில மீடியத்தில் படித்தாலும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பயிற்சி வேண்டும் என்று அதற்கும் அனுப்புகிறார்கள்.
சம்மர் கேம்ப்களில் திணிக்கிறார்கள். இயல்பாக முளைக்கும் சிறகுகளை சிதைத்துவிட்டு அதன் உடலுக்கு ஒவ்வாத பெரும் சிறகுகளை மாட்டி பறக்க வைக்க முனைகிறார்கள். ஆனால், சுய சிறகால் மட்டுமே பறக்க முடியும். ஒட்ட வைத்த சிறகு பலனளிக்காது. என்னைப் பொறுத்தவரை விடுமுறைக் கால சிறப்பு வகுப்புகளாகட்டும், பயிற்சிகள் ஆகட்டும்... குழந்தைகளை சிதைக்கவே செய்கின்றன. அதனால் 75% குழந்தைகளுக்கு இழப்புதான். குழந்தைகள் விளையாட வேண்டும். மண்ணில் கால் பதிக்க வேண்டும். படிக்கவும் வேண்டும்தான். ஆனால், அந்தந்த வயதுக்குரிய படிப்பு போதும். அவர்களை ஜீனியஸாக்க முயற்சிக்காதீர்கள்.
உங்கள் கனவுகளை திணிக்காமல் தூர நின்று குழந்தை களை கண்காணியுங்கள். குழந்தைகள் உங்கள் வழியாக இந்த உலகுக்கு வந்தவர்கள். அவர்கள் உங்கள் உடமையல்ல...’ என்கிறார் ராணி சக்கரவர்த்தி. குழந்தைகளை புத்திசாலிகளாக வளர்க்கலாம். குழந்தைகளாகவும் வளர்க்கலாம். நீங்கள் எப்படி வளர்ந்தீர்கள்..? உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறீர்கள்..? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

Post a Comment